நாளை முதல் பிரம்மாண்டமாக துவங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10.. உற்சாகமாக தயாராகும் ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என அடுத்தடுத்த கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி துவங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை முதல் துவங்கவுள்ளதாக விஜய் டிவி தற்போது அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தமிழகமெங்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஆடிஷன் நடத்தப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று களைகட்ட ஜூனியர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக இதன் பிரமோக்கள் ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் என்பதாக வெளியாகின.

television super singer junior 10 vijay tv

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த சீசன்களை கொடுத்து வருகிறது. இதன் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன் துவக்கம் குறித்த அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நாளை முதல் இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில வாரங்களாகவே தமிழகமெங்கும் ஆடிஷன் நடத்தப்பட்டு அதில் போட்டியாளர்களை விஜய் டிவி தேர்ந்தெடுத்தது.

நாளை துவக்கம்: இந்நிலையில் நாளை பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தன்னுடைய 10வது சீசனை துவங்கவுள்ளது, இந்த நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டு முதலே மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது இசைத்துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிறப்பாக களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

புதிதாக களமிறங்கும் டி இமான்: நாளை துவங்கி ஒவ்வொரு வாரயிறுதியிலும் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளதாக விஜய் டிவி பிரமோக்கள் மூலம் வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாடகி சித்ரா, மனோ இவர்களுடன் டி இமானும் நடுவராக களமிறங்கவுள்ளார். நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து ஆங்கரிங் செய்யவுள்ளனர். முந்தைய சீசன்களிலும் இவர்களது ஆங்கரிங் நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பாக அமைந்த நிலையில், இந்த சீசனிலும் களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: இந்த முறையும் 6 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி, அல்கா, அஜித், ஸ்பூர்த்தி உள்ளிட்ட வெற்றி பெற்ற போட்டியாளர்கள், இன்று புகழ்பெற்ற பின்னணி பாடகர்களாக வலம்வந்துக் கொண்டிருக்கின்றனர். ஏஆர் ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X