சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 போட்டியாளர் விஷ்ணு.. மழலை குரலுக்கு பின்னால் கிராமத்து அழுகுரல்!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக துவங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை அட்ராக்ட் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா இவர்கள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் இம்மானும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். அடுத்தடுத்து ஜூனியர்களின் பாடல்களை இவர்கள் சிறப்பாக கமெண்ட்ஸ்களால் நிரப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் குக்கிராமங்களில் இருந்தும் ஏழ்மை நிலையில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் நிகழ்ச்சியின் 12 வயதான போட்டியாளர் விஷ்ணு மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது குரலுக்கு பின்னால் ஒரு கிராமத்தின் அழுகுரல் நிறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

television vijay tv

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஷோ: விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வரும் நிலையில் பல ஆண்டுகளாக சேனலின் முக்கியமான நிகழ்ச்சியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என அடுத்தடுத்த பிரிவுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கட்டி போட்டு வருகிறது. இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் சீனியர் ஷோ நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் தன்னுடைய பத்தாவது சீசனை தற்போது துவங்கி அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

போட்டியாளர் விஷ்ணு: இந்த நிகழ்ச்சியில் ஜூனியர்கள் என்று கூற முடியாத அளவில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக தங்களுடைய மழலை குரல்களால் வெகுவாக கவர்ந்து வருகின்றனர். நாளைய தினம் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோ நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு சூப்பர் ஸ்டார் கையெழுத்திட்ட கிடாரை பரிசாக கொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சீசனில் விஷ்ணு என்ற 12 வயது சிறுவனின் மழலைக்குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல்நாளில் அத்தை மக உன்னை நினைச்சு என்று இவர் பாடிய பாடல் மிகவும் இனிமையாக அமைந்தது.

குரலுக்கு பின்னால் கிராமத்து அழுகுரல்: ஆனால் இந்த மழலையின் குரலுக்கு பின்னால் ஒரு கிராமத்தின் அழுகுரல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டைமாவட்டத்தில் குருகுளாம்பட்டி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது அப்பா -அம்மா இருவரும் கூலித் தொழிலாளிகளாக இருக்கும் நிலையில் அவர்களின் தினக்கூலி வெறும் 200 ரூபாயாக உள்ளதால் விஷ்ணு பாடுவதை அவர்களால் டிவியில்கூட பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் டிவி இல்லை. இதையடுத்து விஷ்ணுவின் பாடும் திறமையை பாராட்டி இசையமைப்பாளர் இமான், அவருக்கு கீபோர்ட் பரிசளித்துள்ளார். இதேபோல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் டிவி மற்றும் காஸ் அடுப்பை பரிசளித்துள்ளனர்.

தண்ணீருக்காக போராட்டம்: விஷ்ணுவின் பள்ளி படிப்புக்கு தேவையான உதவிகளை மற்ற நடுவர்களான பாடகர் மனோ மற்றும் சித்ராவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனிடையே விஷ்ணுவின் கிராம மக்களின் தண்ணீருக்கான போராட்டமும் தற்போது வெளிவந்துள்ளது. அந்த ஊரில் கிடைக்கும் தண்ணீர் உப்புநீர் என்பதால் அதை குடித்தால் பலவிதமான உடல்நோய்களுக்கு அவர்கள் ஆளாவதாக தெரிவித்துள்ளனர். குடிநீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்துவரவேண்டுமாம். இதையடுத்து அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பலரும் முன்வந்துள்ளனர். தன்னுடைய பாடும் திறமையால் தன்னுடைய குடுமபத்திற்கும் ஊருக்கும் வெளிச்சத்தை தந்துள்ளார் விஷ்ணு. 12 வயதிலேயே இதை சாத்தியப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X