Super singer Junior 9: விஜய் டிவியில் சம்பளம் ஏத்த மாட்டேங்கறாங்க.. ஆங்கர் பிரியங்கா ஆதங்கம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஆங்கர் பிரியங்கா.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

Vijay TVs Super singer junior 9 shows grand finale happening today

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

ஆங்கர் பிரியங்கா: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக பல ஆண்டுகளாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார் ஆங்கர் பிரியங்கா. இவரது தொகுப்பில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள நிலையில் தற்போது நிறைவடையவுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஷோ: இந்த நிகழ்ச்சிக்காக காலை 11 மணியளவிலேயே நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பிரியங்கா, தான் சமத்து பொண்ணு என்றும் அதனால்தா நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னதாக பார்க்க வந்ததாகவும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். விஜய் டிவிக்காக தான் அதிகமாகவே உழைப்பதாகவும் ஆனால் சம்பளம்தான் உயர்த்தி தர மாட்டேன் என்கிறார்கள் என்றும் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் இந்த வீடியோவில் சுற்றி காட்டியுள்ளார்.

பிரம்மாண்ட இறுதிப்போட்டி: தற்போது இந்த நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வரும் நிலையில் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமானவர்களையும் பிரியங்கா இந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பதிலுக்கு அவர்களும் குலதெய்வம் என்று பிரியங்காவை புகழ்ந்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை லைவ் பாருங்க என்று சொல்ல வைத்தார் பிரியங்கா. இந்த நிகழ்ச்சியில் 6 சிறுமிகள் பைனலுக்கு வந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை டைரக்ட் செய்த ரிச்சர்ட் என்பவரையும் பிரியங்கா அறிமுகம் செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 டைரக்டர்: சிறுவனாக சிறிப்பாக இருந்த ரிச்சர்ட் இந்த நிகழ்ச்சியின்மூலம் மிகுந்த பொறுப்பானவராக மாறியுள்ளதாகவும் பிரியங்கா ரிச்சர்ட் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய ரிச்சர்ட், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே இந்த நிகழ்ச்சியை சிறப்பாக எடுத்துக் கொண்டு செல்ல முடிந்ததாகவும் மக்கள் இதேபோல தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் அடுத்தடுத்த சீசன்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இறுதிச்சுற்று போட்டியாளர்கள்: அதிகமான கனவுகளுடன் தங்களது குடும்பத்தினரின் கனவுகளையும் இந்த சிறிய வயதில் தோளில் சுமந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களாக சிறப்பான பயணத்தை மேற்கொண்டு வரும் 6 சிறுமிகள் இந்த இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இவர்களிடம் கூட்டத்தினரைப் பார்த்து பயப்படும் போக்கு இல்லை. மாறாக இதெல்லாம் தங்களுக்கு ஜூஜூபி என்ற மனநிலையே காணப்படுகிறது. இந்த 6 பேர்களில் யார் மகுடம் சூடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X