Super singer Junior 9: நேராக ரெக்கார்டிங் தியேட்டருக்கே போகலாம்.. தமனிடம் பாராட்டு வாங்கிய ரிச்சா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக சிறப்பான எபிசோட்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்கள் சிறப்பாக நிறைவடைந்து தற்போது 9வது சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சூப்பர் சிங்கர் ஜூனியர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள குட்டீஸ் பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஷோவில் ரிச்சா பாடலில் இம்ப்ரஸ் ஆன தமன்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக சிறப்பாக மாஸ் காட்டி வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர், சீனியர் என அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்த சீரியல் தொடர்ந்து 8 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 9வது சீசனும் கடந்த சில வாரங்களாக களைகட்டி வருகிறது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த வார நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 90களின் முன்னணி நாயகனாக வலம்வந்த அப்பாஸ் கலந்துக் கொண்டு, குட்டீஸ்களை உற்சாகப்படுத்தினார். வெளிநாட்டில் செட்டில் ஆன அவர் சமீபத்தில் சென்னை வந்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள அவர், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்பாரோ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வார நிகழ்ச்சியில் கோல்டன் பஸ்ஸர் பெற்று கோகுல், ரிச்சா உள்ளிட்டவர்கள் கோல்ட் வின்னரின் கோல்ட் காயின்களை பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரிச்சாவின் பர்பார்மென்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்தது. குஷி படத்தல் விஜய் -ஷில்பா ஷெட்டி இணைந்து ஆட்டம் போட்ட மேக்கரீனா பாடலை பாடி அசத்தினார் ரிச்சா. அவரது ஒவ்வொரு அசைவும் அனைவரையும் தாளம் போட வைத்ததுடன் நடனமாடவும் வைத்தது. இதையடுத்து 90ஸ் கிட்ஸ் டீமை வழிநடத்திய உன்னி கிருஷ்ணன் மேடையேறி ரிச்சாவிற்கு பாராட்டு தெரிவித்தார். அந்தப் பாடலின் நடனத்தையும் அவர் ஆடியது பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ரிச்சாவின் இந்த பர்பார்மென்சிற்கு பாராட்டு தெரிவித்த நடுவர் தமன், அவர் நேரடியாக ரெக்கார்ட்டிங் ரூமிற்கே செல்லலாம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் சிறுமியாக இருந்தாலும் அவரது குரலில் சிறப்பான மெச்சூரிட்டி காணப்படுவதாகவும் அவரது வாய்ப்பிற்காக முன்னணி இசையமைப்பாளர்களிடம் தான் பேசுவதாகவும் தங்களுக்கான இசையமைப்பாளர் குழுவில் ரிச்சாவிற்காக தான் சிபாரிசு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கோல்டன் பஸ்ஸரையும் கோல்ட் காயினையும் தன்னுடைய சிறப்பான இந்த பர்பார்மென்சிற்காக பெற்றுள்ளார் ரிச்சா. குஷி படத்தில் இந்தப் பாடல் எப்போதுமே தனக்கு பிடித்தப்பாடல் என்றும் இந்தப் பாடலை பார்ப்பதற்காகவே தான் அதிகமான அளவில் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஒரிஜினல் பாடலை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருந்தார் ரிச்சா.


Click it and Unblock the Notifications











