Super singer show: ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்.. விரைவில் துவங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக விஜய் டிவி அடுத்தடுத்த ப்ரோமோக்கள் மூலம் அறிவித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் தமிழக அளவில் நடத்தப்பட்டு அவர்கள் ஷார்ட்-லிஸ்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜூனியர்களில் சிலர் அடித்தட்டு நிலையிலிருந்தும் மேலே வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கை பின்புலத்தை அடுத்தடுத்த ப்ரோமோக்கள்மூலம் விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. தங்களது சோக பின்புலங்களை மீறி இவர்கள் வெற்றி கொடி நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 ஷோ: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சேனலில் மிகவும் முக்கியமான ஷோவாக அடுத்தடுத்து சீனியர், ஜூனியர் என திறமைகளை கண்டறியும் ஷோவாக பல ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் சீனியர் ஷோ நிறைவடைந்த நிலையில் உடனடியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஜூனியர்கள் ஆயிரக்கணக்கான அளவில் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் சீசன் 10 துவங்க உள்ளதாக விஜய் டிவி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இது தொடர்பான அடுத்தடுத்த ப்ரோமோக்களையும் சேனல் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸில் மட்டுமில்லாமல் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் ஆட்டம் புதுசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான பின்புலங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் ராணிப்பேட்டையை சேர்ந்த நஸ்ரின் பங்கேற்கும் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் நஸ்ரினின் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் உதவிகள் செய்து அவரை வழியனுப்பி வைப்பதாக காணப்படுகிறது.
வெற்றிக் கொடி நாட்ட தயாராகும் ஜூனியர்கள்: இதே போல சென்னையை சேர்ந்த சாராஸ்ருதி என்பவரின் பின்புலத்தை சொல்லும் இரண்டாவது பிரமோவும் வெளியாகியுள்ளது. இவர் ஏழ்மையான குடுமபத்தில் பிறந்து வளர்ந்த நிலையில், தன்னுடைய பெற்றேருடன் சேர்ந்து வாழ்வாதாரத்திற்காக பாடி வாழ்வதாக காட்டப்பட்டுள்ளது. இவர்கள் வாழ்வாதாரங்கள் இவ்வளவு சோகமாக உள்ள நிலையில் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய பள்ளியின் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றால் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் வெற்றி கொடி நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
விரைவில் துவக்கம்: இந்த நிகழ்ச்சியின் சிறப்பான குரல் தேர்வை கண்டறிய இசையமைப்பாளர்களும் காத்திருக்கின்றனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தங்களது சிறப்பான திறமையை இந்த மேடையில் வெளிப்படுத்தி இசைத்துறையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுள்ளனர். இதேபோல இந்த சீசன் போட்டியாளர்களும் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியை விட மிகச் சிறப்பாக களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று விஜய் டிவி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











