Thamilum Saraswathiyum: தலைவராக பதவியேற்கும் தமிழ்.. கோதை செய்த செயல்!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடராக தமிழும் சரஸ்வதியும் தொடர் மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரில் விறுவிறுப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக அசோசியேஷன் தேர்தல் மற்றும் அதையொட்டிய சூழ்ச்சிகள் என பரபரப்பாக இந்த சீரியல் சென்றது.

இந்நிலையில் தற்போது அசோசியேஷன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நீண்ட பிரச்சினைகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கிடையில் தமிழ் வெற்றி பெற்றுள்ளார்.

Vijay TVs Thamilum Saraswathiyum Serial new promo makes fans more happy on Thamizh character

அசோசியேஷன் தலைவராக பதவியேற்கும் தமிழ்: நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சேனல்கள் தங்களது தொடர்களுக்கும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளை மட்டுமில்லாமல் முன்னணி தொடர்களையும் ஒளிபரப்பி வருகின்றன. கடந்த வாரத்திற்கான urban categoryயில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் இடம்பெற்றுள்ளது. முன்னணியில் இருந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக சேனலின் தமிழும் சரஸ்வதியும் தொடர் காணப்படுகிறது. தன்னுடைய தங்கையின் கணவர் அர்ஜூனின் சூழ்ச்சியால், தமிழ் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார். அவருடன் அவருடைய மனைவி மற்றும் நண்பர் என அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். இவர்கள் இணைந்து சிறியதாக பிசினசை துவக்கி தொடர்ந்து சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

இவர்களின் இந்த முயற்சியை தன்னுடைய அடுத்தடுத்த சூழ்ச்சிகளால் அர்ஜூன் தகர்க்க திட்டம் தீட்டி வேலை செய்கிறார். அவை அனைத்திலிருந்தும் தன்னையும் தன்னுடைய குடுமபத்தையும் மேலும் தொழிலையும் காப்பாற்றிக் கொள்கிறார் தமிழ். இதனிடையே, அசோசியேஷன் தேர்தலில் போட்டியிடுகிறார் தமிழ். சந்தர்ப்ப சூழலால் அவருடைய அம்மாவான கோத இன்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் கோதையும் போட்டியிடுகிறார்.

Vijay TVs Thamilum Saraswathiyum Serial new promo makes fans more happy on Thamizh character

இதனால் அம்மா மற்றும் மகன் இடையில் போட்டி ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி அவர்களின் உறவில் மேலும் சிக்கல்களை அர்ஜூன் ஏற்படுத்துகிறார். பல சூழ்ச்சிகளை உத்திகளாக பயன்படுத்தி தமிழ் தோற்கும்படி செய்யும் அர்ஜூனின் முயற்சி தவிடுபொடியாகிறது. மேலும் இந்தத் தேர்தலில் தமிழ் வெற்றி பெற்றால், தான் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாகவும் அர்ஜூன் சவால் விட்டிருந்த நிலையில், அதுபோல நடக்குமா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

Vijay TVs Thamilum Saraswathiyum Serial new promo makes fans more happy on Thamizh character

இந்நிலையில் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ், தலைவர் பதவியை ஏற்கும் வகையில், வருகிறார். அவருக்கு முன்னாள் தலைவரான கோதை அம்மாள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறார். மேலும் முன்னாள் தலைவர் என்ற அடிப்படையில், தற்போது தலைவராகியுள்ள தமிழை அவர், அந்த இருக்கையில் அமர வைக்கிறார். தன்னுடைய மகனிடம் அதிகமாக கோபம் கொண்டு, அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய கோதை, தற்போது அவரை தலைவர் இருக்கையில் அமர வைத்துள்ளது, சரஸ்வதி உள்ளிட்ட பலருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X