Top 10 Serials: விஜய் டிவியின் டாப் 10 சீரியல்கள்.. அட பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்திலா!

சென்னை: விஜய் டிவியின் சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவி சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் விஜய் டிவியும் இருந்து வருகிறது.

Vijay TVs this week top 10 serial list released

இந்நிலையில் தற்போது 48வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சீரியல்கள்: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை போலவே சீரியல்களும் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. வாராவாரம் சீரியல்களின் டிஆர்பி மூலம் சீரியல்களின் முன்னணி பட்டியல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவி தன்னுடைய சீரியல்கள் மூலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அடுத்த இரண்டாவது இடத்தில் விஜய் டிவியின் சீரியல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு சிறகடிக்க ஆசை தொடர் கடந்த சில வாரங்களாக முதலிடத்தை பிடித்து வந்தது.

இந்த வார முன்னணி சீரியல்கள்: இந்நிலையில் 48வது வார டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக தன்னுடைய முதலிடத்தை விட்டுக்கொடுத்துவிட்டு இரண்டாவது மூன்றாவது இடங்களில் தத்தளித்துக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 9.4 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரே மாதிரியாக கதைக்களத்தில் பயணித்து ரசிகர்களை கடுப்பேற்றிய இந்தத் தொடர் தற்போது விறுவிறுப்பான எபிசோட்களை கொடுத்து மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.


முதலிடத்தில் பாக்கியலட்சுமி சீரியல்: இதனிடையே கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர், 9.3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. பாக்கியலட்சுமி தொடரைவிட ஒரு புள்ளியே இந்தத் தொடர் குறைவாக பெற்றுள்ளதால், அடுத்த வாரத்தில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே கடந்த வாரத்தில் 2வது இடத்தை பிடித்திருந்த ஆஹா கல்யாணம் தொடர் இந்த வாரம் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4வது இடத்தில் பிக்பாஸ் 7 ஷோ: இன்றைய தினம் 67வது நாளை எட்டியுள்ள பிக்பாஸ் தமிழ் 7 தொடர் இந்த வார டிஆர்பியில் 6.7 புள்ளிகளுடன் சேனலின் 4வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் இந்த வாரம் 5வது இடத்திற்கு தாவியுள்ளது. இந்தத் தொடர் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கி சில தினங்களே உள்ள நிலையில், முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 5வது இடத்தை பெற்றுள்ளது. இந்தத் தொடர் தந்தை -மகன் உறவை பேசும் வகையில் அமைந்தள்ளது.

9 -10 இடங்களில் 3 சீரியல்கள்: விஜய் டிவியின் அடுத்த 5 இடங்களை மகாநதி, மோதலும் காதலும், செல்லம்மா, தமிழும் சரஸ்வதியும் மற்றும் முத்தழகு, பொன்னி தொடர்கள் பிடித்துள்ளன. 10வது இடத்தில் நீ நான் காதல், கண்ணே கலைமானே மற்றும் ஈரமான ரோஜாவே 2 தொடர்கள் பிடித்துள்ளன. இதில் 9வது இடத்தில் தமிழும் சரஸ்வதியும், முத்தழகு மற்றும் பொன்னி தொடர்கள் உள்ளன. அடுத்தடுத்த ஒரே புள்ளிகளுடன் இந்த சீரியல்கள் 9 மற்றும் 10 இடங்களை பிடித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X