Top serials: விஜய் டிவியின் இந்த வார டாப் சீரியல்கள்.. தொடர்ந்து முதலிடத்தில் சிறகடிக்க ஆசை தொடர்!

சென்னை: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை அதன் சீரியல்களும் பெற்று வருகின்றன.

வாரந்தோறும் சேனலின் டிஆர்பியில் முதலிடங்களை பெறும் தொடர்களின் பட்டியல் வெளியாகி வருகின்றன.

இந்த டிஆர்பி பட்டியலில் முதலிடங்களில் சன்டிவி சீரியல்கள் மாஸ் காட்டி வருகின்றன. இரண்டாவது இடங்களில் விஜய் டிவி சீரியல்கள் இடம்பெற்று வருகின்றன.

டாப் தொடர்கள்: சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து தொடர்ந்து சிறப்பான இடங்களை சன் டிவி நிகழ்ச்சிகள் பெற்று வருகின்றன வாரந்தோறும் சேனல்களின் டிஆர்பிக்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதில் தன்னுடைய சீரியல்கள்மூலம் சிறப்பான இடங்களை பெற்றுவருகிறது சன் டிவி. இதில் விஜய் டிவி இரண்டாவது இடங்களையே தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சன் டிவி சீரியல்கள் சிறப்பான இடங்களை பிடித்துள்ளன.

Vijay TVs this week Urban and Rural data released and Siragadikka Aasai serial tops

2வது இடத்தில் விஜய் டிவி: தொடர்ந்து விஜய் டிவி இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல்கள் மூன்றாவது இடங்களை பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த 50வது வாரத்தின் கிராம மற்றும் நகர்ப்புறத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளன. இதில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர், தொட்ர்ந்து இந்த வாரமும் 7.72 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை -விஜயா தம்பதிகள் மற்றும் அவர்களது மகன்கள், மருமகள்களை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர்: வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்த ரவி மற்றும் ஸ்ருதியை தன்னுடைய வீட்டிற்கு அழைதுது வருகிறார் விஜயா. இதனால் அவர்களது வீட்டில் ஏற்படும் குழப்பங்கள், தொடர்ந்து தன்னுடைய மருமகள் மீனாவை மற்றவர்கள் முன்னிலையில் இழிவுப்படுத்தும் விஜயா என இந்த சீரியலின் கதைக்களம் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் கேரக்டர்களை மையமாக கொண்டு அமைந்துள்ளது. மீனாவிற்கு ஆதரவாக மூன்றாவது மருமகள் ஸ்ருதி செயல்படுவது அவருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் ஆறுதலை கொடுத்து வருகிறது.

2வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல்: இந்த தொடர் முதலிடத்தை பிடித்த நிலையில் அடுத்ததாக பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரமும் 7.22 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையிலும் டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற தவறி வருகிறது. தொடர்ந்து சேனலின் மூன்றாவது இடத்தில் ஆஹா கல்யாணம் 4வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 காணப்படுகிறது. சமீபத்தில்தான் இந்த சீரியல் துவங்கப்பட்ட நிலையில் அதற்குள் ரசிகர்களை கவர்ந்து 4வது இடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. இதில் பாண்டியனாக ஸ்டாலின் நடித்து வருகிறார். அவரது மனைவி கோமதியாக பிரபல நடிகை நிரோஷா, இந்த தொடருக்கு வண்ணத்தை கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஹேமா, இந்த சீசனிலும் மீனாவாக நடித்து அதிரடி கிளப்பி வருகிறார்.

சீரியல் டிஆர்பி பட்டியல்: இதனிடையே சேனலில் அதிக டிஆர்பிக்களை பிடித்த சீரியல்களின் பட்டியலை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் மோதலும் காதலும், தமிழும் சரஸ்வதியும், செல்லம்மா, கிழக்கு வாசல் தொடர்களும் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய கிழக்கு வாசல் தொடரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் தன்னுடைய வளர்ப்பு மகள் ரேணுகாவின் திருமணத்திற்காக சாமியப்பன் வீட்டை அடமானம் வைத்து அதனால் சொந்த மகனிடமே அவமானப்படும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X