Bigg Boss Tamil 7: இந்த வாரம் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறியது யார் தெரியுமா? செம ஷாக்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது. கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், விசித்ராவை மட்டுமே வெளியே அனுப்பி இருந்தனர். இந்நிலையில், இன்னும் ஒருவர் மிட் வீக் எவிக்‌ஷனில் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஜனவரி 14ம் தேதியுடன் முடிவடைகிறது. கிராண்ட் ஃபினாலே நெருங்கவுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள் எல்லாம் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மிட் வீக் எவிக்‌ஷன் ஒன்று அதிரடியாக நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Vijay Varma evicted in mid week eviction from bigg boss tamil 7 and his salary details are here

விசித்ரா வெளியேற்றம்: முதல் வாரத்திலேயே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட விசித்ரா இந்த சீசனில் செம டஃப் போட்டி கொடுத்து கடைசியில் டைட்டிலையே தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். மாயாவை காப்பாற்றவே பிக்பாஸ் டீம் விசித்ராவை வீட்டுக்கு அனுப்பி விட்டது என்றும் ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் விமர்சகர்கள் சிலர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

மிட் வீக் எவிக்‌ஷன்: கடந்த வாரமே டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டியாளர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆனால், கமல்ஹாசன் விசித்ராவை மட்டும் எவிக்ட் செய்து வெளியே அனுப்பிய நிலையில், தற்போது மிட் வீக் எவிக்‌ஷன் நடத்தப்பட்டு விஜய் வர்மாவை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார் பிக் பாஸ் என்கிற தகவல் கசிந்துள்ளது.

Vijay Varma evicted in mid week eviction from bigg boss tamil 7 and his salary details are here

விஜய் வர்மா சம்பளம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற விஜய் வர்மா 21வது நாளில் எவிக்ட் ஆகி வெளியேறினார். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் என 21 நாளைக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் அவருக்கு சம்பளம் கிடைத்திருக்கும் என தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக 56வது நாளில் மீண்டும் உள்ளே நுழைந்த அவர் தற்போது மேலும் 44 நாட்கள் தாக்குப்பிடித்துள்ளார். மொத்தமாக 9,75,000 ரூபாய் சம்பளமாக பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக விஜய் வர்மா பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X