விஜயகாந்திடம் குடும்பத்துடன் ஆசி வாங்கினேன்: நடிகை சுஜிதா
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த அழகு நடிகைகளில் சுஜிதாவும் ஒருவர்.
சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த போதே திருமணம், குழந்தை என்று செட்டில் ஆன சுஜிதா சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஒரு கை ஓசை சீரியலில் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
குழந்தைக்காக வரும் வாய்ப்புகளை மறுத்து வருவதாகக் கூறும் சுஜிதா, இப்போது விளம்பரப்படங்களையும் இயக்கிவருகிறார். தன்னுடைய சின்னத்திரை பயணம் மணவாழ்க்கைப் பற்றி அவரே கூறியுள்ளார் படியுங்களேன்.

அமெரிக்காவை சுற்றிப் பார்த்தேன்
கணவர் தனுசை திருமணம் செய்து கொண்ட உடன் ஒரு சின்ன பிரேக் அப்போது அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்தேன். உடனே குழந்தை பிறக்கவே என் வாழ்க்கையில் வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை.

கணவருக்காக நடித்தேன்
கணவருக்காக மீண்டும் தொடரில் நடிக்க ஆரம்பித்து இதுவரை 12 சீரியல்களில் நடித்துள்ளேன். துளசி தொடருக்குப் பின்னர் சீரியலில் இருந்து ஒதுங்கினேன். காரணம் என்னுடைய மகன் தன்வின். அவன்தான் என் உலகம். அவனுக்காக வந்த வாய்ப்புகளை மறுத்தேன்.

விஜயகாந்திடம் ஆசி
எங்களின் வீட்டுக்கு எதிர்வீட்டில்தான் எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் இருக்கிறார். அவருடனும், மனைவி பிரேமலதா, மகன்களுடனும் நட்பு ரீதியாக பேசிக்கொள்வோம். என் மகனின் முதல் பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் போய் அவரிடம் ஆசி வாங்கினோம்.

விளம்பரப்பட இயக்குநர்
நடிகை என்ற ரோலைத் தாண்டி இப்போது விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். சினிமா, டிவி நடிப்புக்கு இடைவெளி விட்ட நேரத்தில் கணவருக்கு உதவியாகப் போய் கற்றுக்கொண்டேன்.

குவியும் பாராட்டு
நான்கு விளம்பரப்படங்கள் இயக்கியுள்ளேன். வங்கி கடன் விளம்பரம் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்துள்ளது. இன்னும் நிறைய விளம்பரங்களை இயக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது என்கிறார் சுஜிதா.


Click it and Unblock the Notifications











