விஜயகாந்த் கோயிலுக்கு வந்தா குழந்தை வரம் கிடைக்கும்.. திடீர் அகோரி வாக்கு.. பிரேமலதா சொன்ன வார்த்தை

சென்னை: சமீபத்தில் இணையத்தில் தன்னை அகோரி என்று சொல்லும் கலையரசன் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று அவர் விஜயகாந்த் சமாதிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்த கலையரசன் விஜயகாந்த் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் விஜயகாந்த் சமாதி அல்ல இது விஜயகாந்தின் கோவில் இந்த கோவிலுக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதே போல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடக்கும் உடல் நலம் குறைவினால் அவதிப்படுபவர்களுக்கு மாற்றம் ஏற்படும் என்று அகோரி கலையரசன் பேசியிருக்கிறார்.

Vijayakanth samadhi where Premalatha met Kalaiyarasan

சமீபத்தில் இணையத்தை திறந்தாலே ஒரு சில நாட்களாக அகோரி கலையரசன் பற்றிய வீடியோ தான் அதிகமாக இருக்கிறது. இவர் சமீபத்தில் ஒரு தனியார் சேனலில் பேட்டி கொடுத்ததன் விளைவாக பலரும் இப்போது இவரை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்தபோது அதில் பிரபலமாக இருந்த கலையரசன் அதற்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அகோரி என்று தன்னை அழைத்துக் கொண்டு அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கலையரசன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே டிக் டாக் பிரபலங்களாக இருக்கும் நிலையில் கலையரசன் பல மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற கலைகளை சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்தார். அதுபோல கலையரசனின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்தபோது பறை இசைத்தப்படியே வெறும் காலால் டியூப்லைட்டை மிதித்து சாதனை படைத்திருந்தார்.

அதற்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து தான் இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக கூறி இருந்தார். இப்படியான நிலையில் பெரிய அளவில் பிரபலமாக இருந்த இந்த ஜோடி சமீப காலமாக என்ன ஆனார்கள் என தெரியவில்லை. ஆனால் இப்போது கலையரசன் அகோரியாக மாறி இருக்கும் நிலையில் அவர் பேசிய வீடியோவிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தன்னுடைய கணவருக்காக அவருடைய மனைவியும் பேட்டிகளில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று கலையரசன் திடீரென்று விஜயகாந்த் சமாதிக்கு சென்று அவரை வணங்கி விட்டு பிரேமலதாவை சந்தித்திருக்கிறார். அப்போது பிரேமலதா முன்பு பேசிய கலையரசன், நான் நிறைய மக்களுக்கு விஜயகாந்த் ஐயா இறைவனிடம் சேர்ந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறேன். ஐயா உடைய கோவிலில் உங்களுடைய வேண்டுதலை வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறும்.

நீங்கள் எனக்கு திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை வரவேண்டும், எனக்கு வேலை வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தால் நிச்சயமாக நடைபெறும் என்று நாங்க வாக்கு கொடுத்து இருக்கோம். ஐயா இறைவனோடு தான் சேர்ந்து இருக்கிறார். அவருடைய புண்ணியங்கள் எல்லாம் பல மக்கள் வீட்டில் கிடைத்திருக்கிறது. அய்யா திரு உருவம் பல கோவில்களில் கற்பகிரகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஐயாவின் புகழ் உலகம் எங்கும் பரவும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. அதுபோல விஜயகாந்த் ஐயா எப்போதும் இந்த மதம், இந்த ஜாதி என்று கூப்பிடவில்லை. இந்துவே எழுதுவா.. முஸ்லிமே முழங்கி வா.. கிறிஸ்தவனை கிளம்பி வா என்று ஐயா சொல்லவில்லை. மனிதனே எழும்பி வா மானிடம் படைக்கவா.. உன் பாதங்கள் நடக்க துவங்கினால் உன் பாதைகள் மறுப்பதில்லை...

சுடும் வரை தான் நெருப்பு... சுற்றி வரும் பூமி... நீங்கள் அனைவரும் போராடும் வரை மனிதன் என்று சொன்ன வீர தமிழன் ஐயா இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார். ஐயா இங்கே எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல ஐயாவின் புகழ் உலகெங்கும் பரவும் என்பதில் மாற்றம் இல்லை. நான் அம்மாவை சந்தித்ததில் சந்தோஷம் ஐயாவை சந்தித்து ஆசி பெற வந்தேன். என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பிரேமலதா அவரிடம் நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள் என்று சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X