குட்டி ஐஸ்வர்யாவாக மாறிய விஜி: யாஷிகாவுக்கு செய்த கொடுமையை பாருங்க
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாஷிகாவின் சேலையை விஜி கத்தரியால் நறுக்குவதை பார்த்துவிட்டு பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
மும்தாஜ் வெளியேற்றப்பட்ட பிறகு தற்போது பிக் பாஸ் 2 வீட்டில் தாடி பாலாஜி, ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி ஆகிய 6 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் விஜி அராஜகம் செய்யும் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஜயலட்சுமி
டாஸ்கில் வெற்றி பெறுவதற்காக எந்த காரியத்தையும் செய்யத் துணிந்துவிட்டார் விஜயலட்சுமி. யாஷிகாவின் சேலையை கத்தரியால் அவர் நறுக்கிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா வழக்கம் போன்று ஜிஞ்சர் சாப்பிட்டது போன்று முகத்தை வைத்துள்ளார்.

சேலை
ஏம்மா விஜி, தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு இப்படியா ஒரு பெண்ணின் சேலையை கத்தரித்து அசிங்கப்படுத்துவது என்று பார்வையாளர்கள் அவரை விளாசி வருகிறார்கள். அடுத்தவர்களின் நியாயத்தை பற்றி பேசும் நீங்களும் கொஞ்சமாவது நியாயமாக நடந்து கொள்ளுங்க விஜி என்று தெரிவித்துள்ளனர்.

யாஷிகா
தெரிந்துவிட்டது, விஜியை யாஷிகாவின் சேலையை கிழிக்க வைத்து அவர் மீது பார்வையாளர்களின் பரிதாபப் பார்வை பட விரும்புகிறார் பிக் பாஸ். என்ன தான் இருந்தாலும் யாஷிகா யாரு, பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியாச்சே. இது புரியாமல் விஜி சேலையை கிழித்து கெட்டப் பெயர் வாங்கியுள்ளார். விஜி, பிக் பாஸ் தான் உங்களின் மைண்டோட விளையாடுகிறார். ஆனால் நீங்கள் என்னவென்றால் அடுத்தவர்களின் மைண்டோட விளையாடணும் என்கிறீர்கள்.
உடை
விஜி உங்களின் திட்டத்தில் தீயை வைக்க. அந்த புள்ள யாஷிகாவே குட்டி, குட்டியாக தான் உடை அணிவார். தற்போது வேறு வழியில்லாமல் சேலை அணிந்திருக்கிறார். அவரின் சேலையை போய் கத்தரித்தால் அவர் என்ன ஃபீல் பண்ணப் போகிறாரா?. உங்களை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது விஜி. போய் வேறு வேலை இருந்தால் பாருங்க.


Click it and Unblock the Notifications











