என்னால் 'அந்த 3' நாட்களை மறக்கவே முடியாது: விஜயலட்சுமி
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜயலட்சுமி தன்னால் மறக்கவே முடியாத 3 நாட்கள் பற்றி பேசியுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் கோல்கேட் புன்னகை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களின் சிறந்த புன்னகை தருணம் பற்றி பேச வேண்டும்.
விஜயலட்சுமி கூறிய விஷயம் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விஜயலட்சுமி பேசியதாவது,

கடவுள்
என் வாழ்க்கையில் நிறைய சைன்ஸ்(signs) அதாவது குறியீடுகள் தெரியும். கடவுள் என்னுடன் பேசுகிறார் என்றே நினைப்பேன். கடவுள் அல்லது இயற்கை. இயற்கை தானே பெரிய கடவுள். ஒரு நாள் நான் காரின் பின் சீட்டில் இருந்தேன். என் கார் கண்ணாடிக்கு அருகே ஒரு பேருந்து வந்து நின்றது. அதில் sultan - சல்டன் என்று எழுதியிருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த பேருந்து தூரத்தில் போகும்போது படித்தேன் அது கன்சல்டன்சி என்று.

ஜாக்பாட்
மறுநாள் காலையில் எழுந்து ஜெய் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பினேன். ஷூட்டிங்கிற்கு செல்லும் வழியில் ஜாக்பாட் என்று போட்டிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று தயாராகிவிட்டு முதல் ஷாட்டுக்காக காத்திருந்தபோது போன் கால் வந்தது. ஆக்கரில் இருந்து அந்த கால் வந்தது. ரஜினி சார் படத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்து கால் வந்தது.

கார்
ஜெய் அப்பொழுது தான் புதிதாக கார் வாங்கியிருந்தான். 20 நிமிடத்தில் அடித்துப் பிடித்து என்னை ஆக்கர் அலுவலகத்தில் சேர்த்தான் அவன். நான் தான் ஹீரோயின் என்றாகிவிட்டது. படத்தின் பெயர் சுல்தான். அந்த sultan என்ற வார்த்தை நான் முந்தைய நாள் பார்த்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. கடவுள் என்னுடன் பேசுகிறார் என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது.

மகிழ்ச்சி
சில நாட்களில் நான் ஹைதராபாத் சென்று சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து 3 நாட்கள் நடித்தேன். ரொம்ப அட்ராக்டிவ் பர்சனாலிட்டி அவர். நான் தூரத்தில் உட்கார்ந்து அவரை பார்த்துக் கொண்டே இருப்பேன், சிரித்துக் கொண்டே இருப்பேன். அந்த 3 நாட்களும் என் முகத்தில் இருந்த புன்னகை போகவே இல்லை. அதனால் புன்னகை என்றால் நான் அதை சொல்வேன். எனக்கு பெருமையான, பிடித்த புன்னகை அந்த 3 நாள் நான் பண்ண அந்த புன்னகை என்றார் விஜயலட்சுமி.


Click it and Unblock the Notifications











