ஜனனி கிளம்பிய கையோடு இரவோடு இரவாக வெளியேறிய விஜயலட்சுமி

By Siva

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து விஜயலட்சுமி வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்தவர் விஜயலட்சுமி. வந்த சில நாட்கள் அமைதியாக இருந்தார். இதுக்கு தானாம்மா விஜி, உங்களை நாயகி சீரியலில் இருந்து விலக வைத்து அழைத்து வந்தார் பிக் பாஸ் என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

அதன் பிறகு ஐஸ்வர்யாவுக்கு தலைவலியாக மாறினார் விஜயலட்சுமி.

கோபம்

கோபம்

மகத் இருந்த வரைக்கும் பொறுமையின் சிகரமாக இருந்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்த மும்தாஜை தினமும் கடுப்பாகி ஐஸ்வர்யா போன்று கத்தவிட்டார் விஜி. கமான் விஜி, சூப்பர், நல்லா பண்றீங்க என்று கூறி பார்வையாளர்களும் அவருக்கு வாக்களித்து ஊக்குவித்தனர். சக போட்டியாளர்களை செமயாக கடுப்பேற்றும் ஐஸ்வர்யாவையும் கோபம் அடையச் செய்தார் விஜி.

விஜி

விஜி

டாஸ்குகளின்போது மற்றவர்கள் செய்வதையே செய்யாமல் வித்தியாசமாக யோசித்து செய்தார் விஜி. பஸ்ஸர் டாஸ்கின்போது அவரின் வித்தியாசமான யோசனைகள் சூப்பராக வேலை செய்தன. இதை பார்த்துவிட்டு கமல் ஹாஸன் கூட விஜயலட்சுமியை பாராட்டினார். லேட்டாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அவர்.

ஃபினாலே

ஃபினாலே

பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டார் விஜி. ஆரம்பத்தில் இருந்து அந்த வீட்டில் இருந்த ஜனனிக்கு ஏனோ விஜி அளவுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை. நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய சில மணிநேரங்களில் இரவு 12 மணிக்கு மேல் விஜியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ரித்விகா

ரித்விகா

பிக் பாஸ் 2 வீட்டில் தற்போது ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் தான் உள்ளனர். இதில் ரித்விகாவுக்கு டைட்டில் கொடுக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த காட்சியை கண்ணால் பார்க்கும் வரை பார்வையாளர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால் பிக் பாஸ் தனது செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக கடைசி நிமிடத்தில் ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்துவிடுவாரோ என்ற பயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X