சீரியலில் இருந்து நடிகையை வெளியேற்றி ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரவழைத்த பிக் பாஸ்
Recommended Video

சென்னை: நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் ஒயில்டு கார்டு மூலம் இதுவரை யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு அவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமி
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு மக்களின் ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
நாயகி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தான் நாயகி சீரியலில் இருந்து வெளியேறினீர்களா? அக்கா இதற்கு நீங்கள் அந்த சீரியலிலேயே நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கவலை
பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள விஜயலட்சுமியை பார்த்து அவரது ரசிகர்கள் பரிதாபப்படுகிறார்கள்.
டேனி
மும்தாஜை அடுத்து விஜயலட்சுமியை மகத்துக்கு பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் வராததுமாக டேனியை பார்த்து நறுக்கென்று கேள்வி கேட்கிறார் விஜயலட்சுமி.


Click it and Unblock the Notifications











