Dumdumdum serial: நடிகை விஜயலட்சுமிக்கு மீண்டும் 'டும்டும்டும்'!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும்படி நன்றாகவே கிடைத்த படங்களில் நடித்து இருந்தார்.

தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்த நம்ம தல நடித்த காதல் கோட்டை படத்தை தந்த இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி. இவரின் அக்கா மக்கள் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

நடிகை விஜயலட்சுமி அகத்தியனின் உதவி இயக்குநராக இருந்த ஃபெரோஸை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு நிலன் என்று ஒரு ஆண் குழந்தையம் இருக்கிறது.

நாயகி சீரியலில்

திரைப் படங்களில் நடித்துக் கொண்டு இருந்த விஜயலட்சுமி, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் இப்போதும் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் ஆனந்தியாக நடித்தார். என்ன காரணமோ என்று நாம புதுசா எதுவும் யோசிக்கத் தேவையில்லை.பிக் பாஸ் சீசன் 2 வில் வாய்ப்பு வந்ததால், நாயகி சீரியலை கைவிட நேர்ந்தது விஜயலட்சுமிக்கு.

 ஆனந்தி கஷ்டம்

ஆனந்தி கஷ்டம்

நாயகி சீரியலில் திரு கேரக்டருடன் ஆனந்தியாக நன்றாக பொருந்திவிட்ட விஜய லட்சுமியை தவிர, பதிலாக வந்த வித்யாவை மக்கள் சிறிது காலம் ஏத்துக்க முடியாமல்தான் இருந்தார்கள். சும்மா சொல்லக் கூடாது, இப்போது ஆனந்தியாக நடிக்கும் வித்யாவை மக்கள் மிக நன்றாகவே ஏற்றுக்கொண்டுதான் ரசிக்கிறார்கள். நல்ல வாய்ப்பை விஜயலட்சுமி மிஸ் பண்ணிவிட்டார் என்றுதான் அப்போதே தோன்றிய எண்ணம்.

 வாய்ப்பை விடலாமா

வாய்ப்பை விடலாமா

எனினும் பிக் பாஸ் வாய்ப்பை நழுவ விடுவது என்பது கஷ்டம்தான்...எனவே,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் விஜயலட்சுமிக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைத்து விடவில்லை. அவ்வப்போது வெளியூர் சென்று குழந்தை கணவருடன் நேரத்தை செலவிட்டு, ட்வீட் பதிவுகளும் போட்டுக் கொண்டு, குடும்பத்தை கவனித்து வந்தார். அப்பா அகத்தியன் தங்களை கஷ்டப்பட்டு, கஷ்டத்தில்தான் வளர்த்தார். நடுத்தர வர்க்க குடும்பத்து பிள்ளைகளாகத்தான் வளர்ந்தோம் என்று கூட சொல்லி இருக்கார்.

 டும்டும்டும் சீரியல்

டும்டும்டும் சீரியல்

இப்போது நடிகை விஜயலட்சுமிக்கு கலைஞர் தொலைக் காட்சியில் டும்டும்டும் என்று ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதை ப்ரோமோவுடன் தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டு இருக்கார் விஜயலட்சுமி. குடும்பத்தின் கஷ்டம் நஷ்டம் தெரிந்து, புரிந்து வளர்க்கப்பட்ட விஜயலட்சுமிக்கு இந்த வாய்ப்பு நல்ல வாய்ப்பாக கிடைத்து, இதன் மூலம் மேலும் பல நல்ல வாய்ப்புக்கள்; கிடைத்து விஜயலட்சுமி மகிழ்வுடன் வாழட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X