ஆகஸ்ட் 29 முதல் கேப்டன் செய்திச் சேனல் தொடக்கம்!

விஜயகாந்தின் பிறந்த நாளான இன்றுதான் செய்திச் சேனலை தொடங்க முதலில் திட்டமிட்டிருந்தனர். இப்போது நான்கு தினங்கள் தள்ளி ஆரம்பிக்கின்றனர்.
தமிழில் ஏற்கனவே சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ், ராஜ் செய்திகள், புதிய தலைமுறை, சத்தியம், ஜி நியூஸ் போன்ற செய்திச்சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் இப்பொழுது கேப்டன் செய்திகளும் இணைகிறது.
அவரவர் நிலைப்பாட்டுக்கேற்ப செய்திகளைச் சொல்லும் சேனல்களாகவே இவற்றில் பெரும்பாலானவை உள்ளன.
செய்திகளை உண்மையா தெரிஞ்சிக்க ஒரு சேனல் எப்போ வருமோ என்பதுதான் பார்வையாளர் கேள்வி!!
Comments


Click it and Unblock the Notifications