பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜி... அப்போ டைட்டில் வின்னர்?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை இருந்து நடிகை விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டதால் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.இதில் நடிகர் மகன், தேவர்மகன் பட ஸ்டைலில் வேட்டி சட்டையும் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி நேற்று வெளியேற்றப்பட்டுவிட்டதால் , ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி ஆகியோர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
இவர்களில் அடுத்து யார் வெளியேற்றப்பட போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ், முதலில் ரித்விகாவை வெளியில் அழைத்து வருவது போல் பாவனை செய்தார்.
ஆனால் விஜியை அவர் வெளியே அழைத்து வந்தார். இதனால் பிக் பாஸ் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார் விஜி.
வைல்ட் கார்டு சுற்று மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தன்னை இறுதி போட்டி வரை அழைத்து வந்த ரசிகர்களுக்கும், பிக் பாஸுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பிக் பாஸின் இந்த முடிவின் மூலம் ரத்விகாவும், ஐஸ்வர்யாவும் தான் வீட்டில் எஞ்சியிருக்கிறார்கள். இருவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது சிறுதி நேரத்தில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











