சின்னத்திரையை விட்டு மெல்ல விலகும் விஜி சந்திரசேகர்
அழகி சீரியலில் பாசமான அம்மா சுந்தரியாக நடித்து வரும் நடிகை விஜி சந்திரசேகர், ஆரோகணம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆனார்.
சீரியல், சினிமா என இரண்டிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டினைப் பெற்றுள்ளார் விஜி சந்திரசேகர். தற்போது அவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் வருகின்றனவாம்.
இதனால் சின்னத்திரையில் நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

தில்லுமுல்லு
நடிகை சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர். தில்லு முல்லு படத்தில் அறிமுகமானர். ஒரு சில படங்களில் நடித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் மணிரத்தினம் படத்தில் நடித்தார்.

சின்னத்திரை அறிமுகம்
சினிமாவில் பிரேக் விட்ட பின்னர் சின்னத்திரையில் நடிக்க வந்தார். சன் டிவியில் அழகி சீரியலில் சுந்தரியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

ஆரோகணம் படம்
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது மதயானைக்கூட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்ட முழுநேரமாக சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

சினிமாவை மிஸ் பண்ணிட்டேன்
வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் தட்டுமுன்னு சொல்வாங்க எனக்கு இரண்டு முறை தட்டுச்சு. முதல் தடவை தட்டினப்போ மிஸ் பண்ணிட்டேன். இரண்டாவது தடவையும் தட்டியிருக்கு மிஸ் பண்ண மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நல்ல கதைகளில் நடிப்பேன்
முதல் தடவை தட்டினது தில்லு முல்லு வாய்ப்பு. ஆனால் அப்போது நடிப்பை விட படிப்பு, குடும்பம், வேலை பெருசா தெரிஞ்சுது. சினிமாவை மிஸ் பண்ணிட்டேன். இப்போது ஆரோகணம் மூலம் ரெண்டாவது தடவையா கதவை தட்டியிருக்கு இதை மிஸ் பண்ண மாட்டேன். இனி நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். சின்னத்திரையில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் விஜி.


Click it and Unblock the Notifications











