பிக் பாஸ் வீட்டில் செம சண்டை: குமுறிக் குமுறி அழும் ஐஸ்வர்யா
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜயலட்சுமி கூறியதை கேட்டு ஐஸ்வர்யா அழுது சீன் போட்டுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டிற்கு ஒயில்டு கார்டு மூலம் வந்த விஜயலட்சுமி தற்போது தான் மெதுவாக பேசத் துவங்கியுள்ளார். இனி தான் சண்டை சச்சரவில் ஈடுபடுவார் போல.
இந்நிலையில் விஜயலட்சுமி அருமையாக பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜயலட்சுமி
உங்களுக்கு தமிழ்நாட்டை பற்றி தெரியுமான்னு தெரியாது. பிடித்துவிட்டால் தலையில் தூக்கி வைத்து ஆடுவாங்க. ஆனால் முட்டாள் இல்லை என்று விஜயலட்சுமி ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்றாயனிடம் கூறினார். உடனே ஐஸ்வர்யா தம்மடிக்கும் அறையில் அமர்ந்து கொண்டு தமிழ் மக்கள் முட்டாள் இல்லே என்று கூறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா
ப்ரொமோ வீடியோவில் விஜயலட்சுமி செம்ம சண்டை என்கிறார். யார், யாருக்கு இடையே சண்டை என்று தெரியவில்லை. அட்ரா, அட்ரா இன்று இரவு இருக்கு சண்டை, பரபரப்பு இருக்கு என்று ஒரு பக்கம் தோன்றினாலும் அட போங்கய்யா உங்க ப்ரொமோவை எப்படி நம்புவது என்ற அதிருப்தியும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

முட்டாள்
விஜயலட்சுமி கூறியதில் தவறு இல்லை. தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்பதை ஐஸ்வர்யா புரிந்து கொள்ள வேண்டும். நாமினேட் ஆகாமல் அவர் பாதுகாப்பாக இருக்கக் காரணம் தமிழ் மக்கள் அல்ல மாறாக பிக் பாஸ் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐஸ்வர்யாவை யார் காப்பாற்றுகிறார் என்ற உண்மை விஜயலட்சுமிக்கு தெரிந்தாலும் விதிமுறைகளின்படி அவர் சொல்லக் கூடாது.
சென்றாயன்
மும்தாஜ், ஐஸ்வர்யா, சென்றாயனை மட்டும் தனி இடத்தில் வைத்து பேசியுள்ளார் விஜி. அப்படி என்றால் அவர்கள் 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார்களா?. ஐஸ்வர்யா நாமினேட் ஆவதற்காக தான் பார்வையாளர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











