பிக் பாஸை எங்கே அடிச்சா வலிக்குமோ அங்கேயே அடிச்ச விஜி

By Siva

Recommended Video

Bigg Boss 2 Tamil Highlights | விஜயலக்ஷ்மி - ஐஸ்வர்யா யுத்தம் ஆரம்பம். டார்ச்சருக்கே டார்ச்சரா?

சென்னை: விஜயலட்சுமி ஐஸ்வர்யா பிறருக்கு செய்ததை அவருக்கு திருப்பி செய்யும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள விஜயலட்சுமி செய்யும் செயல்கள் பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்யவில்லை. அவர் நேற்றைய டாஸ்கின்போது யாஷிகாவின் சேலை கிழித்தார்.

இந்நிலையில் பேயாட்டம் போடும் ஐஸ்வர்யாவுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளார்.

விஜி

டாஸ்கின்போது பருப்பு பாக்கெட்டை துணியில் கட்டி அதை ஐஸ்வர்யாவின் கையில் கட்டுகிறார்கள். இது விஜயலட்சுமியின் ஐடியா. மேலும் ஐஸ்வர்யாவின் முகத்தில் நீரை ஊற்றுகிறார் விஜி. இதை எல்லாம் பார்த்து அய்யோ ஐஸ்வர்யா பாவம் என்று பார்வையாளர்கள் பரிதாபப்படுவார்கள் என்று பிக் பாஸ் நினைத்தால் அது தவறு. கமான் விஜி, நிறைய எதிர்பார்க்கிறோம் என்பதே பார்வையாளர்களின் கமெண்ட்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

சர்வாதிகாரி டாஸ்கின்போது ஐஸ்வர்யா செய்த அட்டூழியங்களை பார்த்தால் விஜி அவருக்கு செய்வது எல்லாம் ஒன்றுமே இல்லை. போகிற போக்கை பார்த்தால் விஜி பார்வையாளர்களுக்கு பிடித்த போட்டியாளராகிவிடுவார் போன்று. சரியாக ஐஸ்வர்யாவை டார்கெட் செய்யும் விஜியை பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

ஆப்பு

ஆப்பு

விஜி, இப்படி ஐஸ்வர்யாவை டார்கெட் செய்தால் உங்களை பேக்கப் செய்துவிடுவார் பிக் பாஸ். ஐஸ்வர்யா யார் என்று தெரிந்துமா இப்படி எல்லாம் செய்கிறீர்கள். பார்வையாளர்கள் உங்களை காப்பாற்ற ஓட்டு போட்டால் கூட அதை செல்லா ஓட்டுகளாக்கிவிடுவார் பிக் பாஸ். அந்த கலையில் அவர் முன்னோடி என்பது அனைவருக்கும் தெரியும்.

ரித்விகா

இனிமே பயங்கரமாக டாஸ்க் செய்யப் போவதாக கூறிவிட்டு வழக்கம் போன்று ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் ரித்விகாவை பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி வரைக்கும் நடுவராக இருக்க மட்டுமே ரித்விகா லாயக்கு என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X