பிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க!

பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராக விளையாடி வருகிறார் விஜி.

By Staff

Recommended Video

Bigg Boss 2 | கொஞ்சம் ஓவரா போறாங்களோ வில்லி விஜயலக்ஷ்மி? #vijayalakshmi

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை பாடாய்படுத்த விஜி நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு அதிரடி திட்டங்களும் அலற வைக்கின்றன.

பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் விஜி. நகைச்சுவையான பேச்சு, டாஸ்க்குகளில் ஈடுபாடு என தான் திறமையான போட்டியாளர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, சக போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் இப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதுவரை தான் சந்தித்த எல்லா டாஸ்க்குகளிலும் புதுப்புது யுக்திகளை களமிறக்கி பிக் பாஸ் வீட்டின் இம்சை அரசி ஆகி வருகிறார் விஜி.

டாஸ்க்:

டாஸ்க்:

அதிலும் குறிப்பாக பஸ்ஸர் டாஸ்க்கில் தன் புதுப்புது யோசனைகளால் சக போட்டியாளர்களை அலற வைத்தார். இதை எதிர்பார்த்து தானோ என்னவோ முதல் ஆளாக அவரையே களமிறக்கினார் பிக் பாஸ். ஆனால் அந்த டாஸ்க்கைப் பற்றி அதிகம் சீரியசாக எடுத்துக் கொள்ளாத போட்டியாளர்கள் கடந்த சீசனில் பார்த்தவாறே தண்ணீரை ஊற்றுவது போன்ற சின்னப்பிள்ளைத்தனமான டார்ச்சர்களைக் கொடுத்தனர்.

விஜியின் திட்டம்:

விஜியின் திட்டம்:

ஆனால் மற்றவர்களைப் போல் இந்த டாஸ்க்கை நினைக்கவில்லை விஜி. சீரியசாக களமிறங்கினார். பஸ்ஸர் மீது வைத்திருக்கும் கையை எடுக்க வைக்க என்னென்னலாம் செய்யலாம் என ஒவ்வொரு போட்டியாளருக்கும் புதிது புதிதாக யோசித்தார்.

டார்ச்சர்:

டார்ச்சர்:

விஜியின் டார்ச்சர்களுக்கு ஓரளவு ஈடுகொடுத்தவர் யாஷிகா மட்டும் தான். ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா மற்றும் பாலாஜி என மற்ற போட்டியாளர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தளவிற்கு ரூம் போட்டு விதவிதமாக யோசித்து வில்லத்தனமாக டார்ச்சர் கொடுத்தார் விஜி.

எண்ணெய்:

எண்ணெய்:

ஜனனிக்கு டவல்களை மேலே போட்டு அதில் நீரை ஊற்றினார். பாவம் ஜனனியால் அதன் எடையைத் தாங்க இயலவில்லை. யாஷிகாவிற்கு கையில் எண்ணெய் ஊற்றினார், மிளகாயை எண்ணெய்யில் போட்டு அந்த நெடியைக் கொண்டு வந்து காட்டினார்.

பாவம் ஐஸ்:

பாவம் ஐஸ்:

ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் கை வலியால் அவதிப்படும் அளவிற்கு கையில் பருப்பு பைகளைக் கட்டி விட்டார். எரிகிறதைப் பிடிங்கினால் கொதிக்கிறது அடங்கும் என லாஜிக்கைப் புரிந்து கொண்டு கையை போட்டியாளர்கள் பஸ்ஸரில் இருந்து எடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை திட்டம் போட்டு விளையாடினார் விஜி.

வில்லியான நாயகி:

வில்லியான நாயகி:

சென்னை 28 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், சீரியலிலும் நாயகியாக நடித்த விஜயலட்சுமியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து இப்படி வில்லியாக்கி விட்டார்களே எனக் கூறும் அளவிற்கு டாஸ்கில் மற்ற போட்டியாளர்களுக்கு விதவிதமாக டார்ச்சர் கொடுத்து வருகிறார் அவர். பேசாம விஜி நீங்க நடிக்கிறதவிட்டுட்டு ஸ்கிரிப்ட் ரைட்டரா போயிடலாம், அவ்வளவு புதுசு புதுசாக யோசிக்கிறீங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X