Don't Miss!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
ஸ்டைலாக மாறிய பாக்கியா.. கடுப்பான ராதிகா.. பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த சிறப்பான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடர் கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களது வாழ்க்கையை சுற்றியே அமைந்திருந்தாலும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
தொடரில் தாத்தாவாகும் வயதில் கோபிக்கு வந்த காதல், அதையொட்டிய அவரது தகிடுதத்தங்கள் மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகும்
சூப்பர்
ஹிட்
திரைப்படம்...
கொண்டாட்டத்திற்கு
தயாரா
மக்களே?

விஜய் டிவியின் தொடர்கள்
விஜய்
டிவியின்
தொடர்களுக்கு
அதிகமான
முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டு
எடுக்கப்பட்டு
வருகிறது.
இந்தத்
தொடர்கள்
ரசிகர்களை
கவர்ந்து
டிஆர்பியிலும்
முக்கியமான
பங்கு
வகிக்கிறது.
பாக்கியலட்சுமி,
பாரதி
கண்ணம்மா,
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
என
தொடர்ந்து
விஜய்
டிவியின்
பல
தொடர்கள்
ரசிகர்களை
கட்டிப்
போட்டு
வருகின்றன.
குறிப்பாக
பாக்கியலட்சுமி
தொடர்
சேனலில்
மட்டுமில்லாமல்
ரசிகர்களின்
மனதிலும்
முதலிடத்தில்
உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்
கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று முக்கியமான கேரக்டர்கள் மற்றும் அவர்களை சூழ்ந்த உறவுகள் என இந்தத் தொடர் அடுத்தடுத்த சுவாரஸ்யங்ளை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. தாத்தா ஆகும் வயதில் கோபிக்கு ஏற்பட்ட காதல், அதையொட்டி மனைவியை விவாகரத்து செய்து, தான் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சூழல் ஆகியவை இந்த தொடரில் கடந்த காலங்களில் கதைக்களங்களாக இருந்தன.

நெருக்கடியில் கோபி கேரக்டர்
ஆனால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட பின்புதான் அவரது வாழ்க்கையில் ரசிகர்கள் எதிர்பார்த்த பல சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. இரண்டாவது திருமணம் பல்வேறு வகையில் அவருக்கு கொடுத்துவரும் நெருக்கடி அவருக்கு பிரச்சினையை கொடுத்த போதிலும் ரசிகர்கள் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அவரைப் பார்த்து கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

பிசினசை விரிவுப்படுத்தும் பாக்கியா
தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை பாக்கியா கொடுத்த நிலையில், ஏன் இப்படி என்றுதான் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தொடர்ந்து பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோபி வீட்டை விட்டு வெளியேறும் சூழலை ஏற்படுத்தினார் பாக்கியா. தொடர்ந்து பல்வேறு வகையில் தன்னுடைய பிசினசை விரிவுப்படுத்தி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் ட்விஸ்ட்
ராதிகாவை கோபி திருமணம் செய்த நிலையில், அவரது வீட்டிற்கு அவரது அப்பா மற்றும் மகள் இனியா வந்துள்ளதும் சீரியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியலில் சுதந்திரமாக வலம்வந்த ராதிகா, இல்லத்தரசியாக மாறிவரும் சூழலில், பாக்கியா, தன்னுடைய பிசினசை விரிவுப்படுத்தும்வகையில் சுதந்திரத்தை அனுபவவித்துவரும் ட்விஸ்ட்டும் தொடரில் நடந்து வருகிறது.

கேரக்டர்களின் மாற்றம்
இதனிடையே எப்போதும் வீட்டை சுற்றியே தன்னுடைய கவனத்தை செலுத்திவரும் பாக்கியா தற்போது ப்யூட்டி பார்லருக்கு வந்து தன்னுடைய லுக்கை சிறப்பாக்கிக் கொள்கிறார். அங்கு வரும் ராதிகாவோ, ஊழியர் ஒருவரிடம் ஏன் திருமணம் செய்துக் கொண்டேன் என்று யோசிப்பதாக புலம்புகிறார். தொடர்ந்து அங்கு பாக்கியாவை பார்க்கும் ராதிகா, பார்லருக்கெல்லாம் வருவாரா என்று யோசிப்பதாகவும் இந்த வாரத்தின் ப்ரமோ காணப்படுகிறது.