BB Salary: பிக்பாஸ் சம்பளம் வந்ததும் ஆட்டம் போடும் சுபிக்‌ஷா.. தலையிலே ரெண்டு போட்ட விக்கல்ஸ் விக்ரம்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் 9ஆவது சீசனில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சுபிக்‌ஷாவுக்கு எப்போதும் இடம் உண்டு. காரணம் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என பாசத்தை பொழிந்து கொண்டு இருந்தார்கள். அதை பிக்பாஸே கலாய்த்துள்ளார். இவர்களின் இந்த பாசப்பிணைப்பு என்பது போட்டி முடிந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது.

அவ்வகையில் பிக்பாஸில் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் இருந்த போட்டியாளர்களான சுபிக்‌ஷா மற்றும் டாப் 3 ஃபைனலிஸ்ட்டான விக்கல்ஸ் விக்ரம் என இருவரும் இணைந்து தற்போது பிக்பாஸையே கலாய்த்தும் பிக்பாஸில் அவர்கள் இருந்ததற்காக சம்பளம் வந்து விட்டது தொடர்பாக கலாய்த்து ஜாலியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்க்லள்.

Vikkals Vikaram and Subiksha Trolls About Bigg Boss Salary
Photo Credit:

அதாவது, " நல்லா செலவு பண்ணி ஜாலியா இருப்பேன்" என்று ஒரு போர்டில் எழுதி அதன் அருகில் சுபிக்‌ஷா ஆடிக் கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் விக்கல்ஸ் விக்ரம், நல்லா ஜாலியா இருப்பீங்க போலயே என்று கேட்கிறார். அதற்கு சுபிக்‌ஷாவோ சம்பளம் வந்துவிட்டது நல்லா செலவு பண்ணி ஜாலியா இருப்பேன் என்று கூறுகிறார். உடனே அதற்கு 30 சதவீதம் வருமான வரி பிடிப்பார்கள் என்று விக்ரம் கூறுகிறார். இதனால் ' நல்லா' என்பதை அழித்துவிட்டு ஆடுகிறார் சுபிக்‌ஷா.

அடுத்து, கடன் எல்லாம் இருக்கே, நீங்க மூனு மாசம் கடன் கட்டாம இருந்து இருப்பீங்க,அது குட்டி போட்டு இருக்கும் என்று விக்ரம் கூறியதும், செலவு பண்ணி என்ற வார்த்தைகளை அழித்து விடுகிறார். இதையடுத்து ஜாலியா இருப்பேன் என்று கூறுகிறார். அடுத்து, செலிபிரிட்டி ஆகிட்டீங்க, புது புது டிரஸ் எல்லாம் வாங்கனும், மேக்கப் கிட்ஸ் வாங்கனும், செல்ஃப் லவ் பண்ண போறீங்க அப்படி இருக்கும்போது மிச்ச காசை வச்சு என்ன பண்ண போறீங்க என்று கேட்கிறார். அதற்கு சோகமாக இருப்பேன் என்று பதில் சொல்லிவிட்டு நகர்கிறார் சுபிக்‌ஷா. இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Vikkals Vikaram and Subiksha Trolls About Bigg Boss Salary
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X