For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராபர்ட் அப்பா.. குயின்ஸி பொண்ணு.. அப்போ ரச்சிதா.. குடும்பமா செயல்படுறாங்கனு புகார் கொடுத்த விக்ரமன்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீடா அல்லது 100 நாள் சீரியலா என்றே தெரியாத அளவுக்கு இந்த சீசன் திடீரென யுடர்ன் அடித்துள்ளது.

  ஆரம்பத்தில் 4 நாட்களே 40 நாட்கள் போல இருக்கு என பாராட்டிய கமலே, 50 நாள் ஆகப் போகுது, ஆனால், பெருசா சம்பவம் எதுவுமே பண்ண மாட்றாங்களே, ரொம்ப சப்புன்னு இருக்கே என கண்டிக்க ஆரம்பித்து விட்டார்.

  இந்நிலையில், அசீம் சொன்ன குரூபிஸத்தை நிரூபிக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டில் ஒரு குட்டி குடும்பமே இருக்கு என ராபர்ட், ரச்சிதா மற்றும் குயின்ஸி பெயரை விக்ரமன் சொன்னதும் வீட்டுக்குளேயும் வெளியே ரசிகர்கள் மத்தியிலும் ஒரே சிரிப்பு தான்.

  குட்டி குடும்பம்

  குட்டி குடும்பம்

  ராபர்ட், ரச்சிதா மற்றும் குயின்ஸி மூவருமே ஒரு குட்டி குடும்பமாக இந்த பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து வராங்கன்னு கேஸ் போட்டுருப்பேன் என விக்ரமன் கமல் கேட்டதும் பட்டென சொல்ல ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் விழுந்து விழுந்து சிரித்து அந்த குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டாங்க..

  ஸ்கோர் செய்த விக்ரமன்

  ஸ்கோர் செய்த விக்ரமன்

  அசீம் சொன்ன ஃபேவரிஸமும் குரூப்பிஸமும் இந்த வீட்டில் இப்படி குடும்பமாகவே குடித்தனம் நடத்துது என வெளிப்படையாக போட்டு உடைத்து விக்ரமன் பேசிய பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் ஏகப்பட்ட போட்டியாளர்களின் மனதுக்குள் பூட்டிக் கிடந்த விஷயத்தை இப்படி பப்ளிக்குட்டி பண்ணிட்டாரே என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  ராபர்ட் அப்பா

  ராபர்ட் அப்பா

  ராபர்ட் மாஸ்டராக இருந்தவரை குயின்ஸி ராபர்ட் அப்பாவாகவே மாற்றிவிட்டார். பொண்ணுக்காக ஏகப்பட்ட இன்ஃப்ளூயன்ஸ் செய்து மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களை பேசக் கூட விடாமல் ராபர்ட் அராஜகமாக நடந்து கொண்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்து ஒரே காமெடி பிக் பாஸாக இந்த வாரம் மாறிவிட்டது.

  குயின்ஸி பொண்ணு

  குயின்ஸி பொண்ணு

  பிக் பாஸ் வீட்டில் சொகுசாக தூங்கி, எழுந்து, சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கும் சுட்டிக் குழந்தையாகவே குயின்ஸி மாறிவிட்டார் என தொடர்ந்து அசீம், விக்ரமன் உள்ளிட்ட பலரும் அவர் மீது புகார்களை அடுக்கி வைக்க குயின்ஸி அடுத்த வாரம் எப்படி வெடிக்க போகிறார் அவர் அப்பா இல்லாமல் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  அய்யோ நான் அம்மா இல்லை

  அய்யோ நான் அம்மா இல்லை

  ராபர்ட் அப்பா, குயின்ஸி பொண்ணு என ஓடிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் ரச்சிதாவை அம்மாவாகவே மாற்றிவிட்டார் விக்ரமன். உடனடியாக அய்யோ என்னை அந்த லிஸ்டிலேயே சேர்க்காதீங்க.. இது பிக் பாஸ், சீரியல் இல்லைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன் என ரொம்பவே சேஃப் ஆக தப்பிக்க பார்க்கிறார் ரச்சிதா. இன்னமும் முகமூடி போட்டுக் கொண்டு ரச்சிதா சேஃப் கேம் ஆடி வருவதாக அனைவரும் சொல்வது உண்மையாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

  மாப்பிள்ளை வேற

  மாப்பிள்ளை வேற

  அம்மா, அப்பா, பொண்ணுன்னு இருக்குற குடும்பத்துல குயின்ஸிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை வேற ராபர்ட் மாஸ்டர் செய்து வருகிறார் என கிடைத்த கேப்பில் கிடா வெட்டி விட்டார் தனலட்சுமி. எல்லாம் ஒரு ஜாலிக்காக சார் என ராபர்ட் மாஸ்டர் சப்பைக் கட்டுக் கட்ட கமல் கடுப்பாகி க்ரூபிஸத்துக்கு நோ சொல்லி உள்ளார்.

  English summary
  Vikraman openly talks about Robert, Rachita and Queency's family play in the Bigg Boss Tamil 6 house and many housemates laughed loudly and appreciates Vikraman's open talk about groupism.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X