ஆதவனை இரண்டாவதாக திருமணம் செய்யவில்லை.. ஆனால், குழந்தையின் பெயர் ‘மீரா ஆதவன்‘ குழப்பிய விலாசினி!
சென்னை: தொகுப்பாளர் ஆதவனுக்கும், சீரியல் நடிகை விலாசினியும் திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. ஆனால், நடிகை விலாசினி அதை மறுத்த நிலையில் தற்போது, தனது விலாசினி வெளியிட்டு இருக்கும் குழந்தையின் வீடியோ மற்றும் பெயர் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஆதவன்: மிமிக்ரி கலைஞராகரான ஆதவன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஆதவனுக்கும் டப்பிங் கலைஞரும், நடிகையுமான விலாசினிக்கும் திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் பரவின. அதற்கு காரணம்
விலாசினி தன்னுடைய கையில் குழந்தையுடன் ஆதவனோடு ஜோடியாக போஸ் கொடுத்திருந்தனர். இந்த போட்டோ குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ என்று சொல்லப்பட்டது. இதைப்பார்த்த பலரும், எப்போ கல்யாணம் ஆச்சு, உங்களுடைய குழந்தையா என கேள்வி எழுப்பினார்கள்.

இரண்டாம் திருமணம் இல்லை: ஆதவன் ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பிரிந்தார். அதே போல, நடிகை விலாசினியும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது. இதற்கு விலாசினி தனது இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து, ஏராளமானோர் உங்களுக்கு ஆதவன் உடன் இரண்டாவது திருமணம் ஆகிடுச்சா என கேட்கிறார்கள். எனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீரா ஆதவன்: ஆனால், தற்போது நடிகை விலாசினி இன்ஸ்டாகிராமில் குழந்தை பாட்டியுடன் விளையாடும் வீடியோ வெளியிட்டு தனது மகளின் பெயரை " மீரா ஆதவன்" என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆதவனுடன் இரண்டாவது திருமணம் இல்லை என்று விலாசினி விளக்கம் கொடுத்துவிட்டு இப்போது, குழந்தையின் பெயர் "மீரா ஆதவன்" என்று வெளியிட்டு இருப்பது பலரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்காக திருமணத்தையும், குழந்தையையும் மறைக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். அதே நேரம் சிலர் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று கருத்துக்களை பதிவிட்டு நடிகை விலாசினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications