விஜய் டிவி பொங்கல் ஸ்பெஷல்: விஷாலின் 'வில்லா டு வில்லேஜ்'
விஜய் டிவியில் பொங்கல் பண்டிகையை ஜனவரி 14, 15,16 ஆகிய மூன்று தினங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. விக்ரம், விஜய், மம்முட்டி, மகேஷ்பாபு, ஆகியோர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.
கார்த்தி, விஜய், சந்தானம், ஆகியோரின் பேட்டிகள், பொங்கல் பண்டிகை கொண்டாடிய அனுபவங்களை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை கலைஞர்கள் கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடுகின்றனர். இந்த விளையாட்டுப்போட்டிகளுக்கு விஷால் நடுவராக பங்கேற்கிறார்.

சென்னையில் திருவையாறு
ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தன்று காலை 7 மணிக்கு சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று பாடுகின்றனர்.

20ம் ஆண்டில் இளைய தளபதி
நடிகர் விஜய் சினிமாத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ‘20 ஆண்டில் இளைய தளபதி' நிகழ்ச்சி காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?
காமெடி நடிகர் சந்தானம் தன்னுடைய அடுத்த படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பற்றி விஜய் டிவியில் பகிர்ந்து கொள்கிறார். இது காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வில்லா டூ வில்லேஜ்
வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சிக்காக பொள்ளாச்சியில் உள்ள நகைசுவை நடிகர் கவுண்டமணியின் கிராமத்தில் விஜய் டிவி குழுவினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆகியோர், சமர் ஹீரோ விஷாலுடன் இணைந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்திருக்கிறார்கள். இதில் தொகுப்பாளர்களோடு சின்னத்திரை நட்சத்திரங்களான நீபா, மேகி, குஷ்பு, ஸ்வேதா, ரம்யா, திவ்யா, மற்றும் பாடகி வினைதா செய்தி தொகுப்பாளினி பனிமலர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

போட்டிகளில் கலக்கிய நட்சத்திரங்கள்
விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் கபடி, ரேக்லா ரேஸ், உரி அடித்தல், பரிசல் ஓட்டுதல், கயிறு இழுத்தல், கோழி பிடித்தல், வயல் வரப்பில் தலையில் தண்ணீர் சுமந்து வருதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள நடிகர் விஷால் அவர்களுக்கு உற்சாகமளித்து அவர்களின் போட்டியில் நடுவராக இருந்து கலகலப்பூட்டியிருக்கிறார்.இந்த நிகழ்ச்சி ஜனவரி 14, 15, 16 தேதிகளில் திரைப்படங்கள் தொடங்கும் முன்பு காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒளிபரப்பாகிறது.

விக்ரம் நடித்த தாண்டவம்
ஜனவரி 14 காலை 11 மணிக்கு நடிகர் விக்ரம் நடிகை அனுஷ்கா நடித்த தாண்டவம் சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மாலை 7 மணிக்கு மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடித்த வேட்டை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

கார்த்தியுடன் பொங்கல்
நடிகர் கார்த்தி தன்னுடைய திரையுலக பயணத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் தனக்கு போட்டியாளர் யார் என்பதை மனம் திறக்கிறார் கார்த்தி. மாலை 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மேக்கிங் ஆப் விஸ்வரூபம்
பரபரப்பான திருப்பரங்களை கடந்து வந்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் பற்றி பேசுகிறார் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் நடிகருமான கமல்ஹாசன். மாலை 4 மணிக்கு மேக்கிங் ஆப் விஸ்வரூபம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

திரிஷாவின் நண்பன்
விஷால் திரிஷா பங்கேற்றும் சிறப்புப் பேட்டி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நட்புடன் வலம் வரும் விஷால் திரிஷா ஜோடி தங்களின் நட்பு பற்றிய சுவாரஸ்யமான பக்கங்களை பேசுகின்றனர்.

மாட்டுப் பொங்கலன்று நண்பன்
விஜய் நடித்த நண்பன் திரைப்படம் ஜனவரி 15ம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் விஜய் உடன் ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடித்துள்ளனர். மாலை நான்கு மணிக்கு மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஜனவரி 16ம் தேதி காலை 11 மணிக்கு மம்முட்டி நடித்த போக்கிரி ராஜா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











