தீனா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல.. வில்லன் நடிகர் சாய் தீனா என்னம்மா ப்ரொபோஸ் பண்றாரு!

சென்னை: தீனா படத்தில் அஜித்துக்கும் லைலாவுக்கு இருக்கும் காதல் காட்சிகள், அந்த படத்தின் சண்டைக் காட்சிகளை விட அதிகம் ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில், அந்த காட்சிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வில்லன் நடிகர் சாய் தீனா ப்ரொபோஸ் பண்ணும் காட்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்தில் குடும்பத்துடன் சாய் தீனா புத்த மதத்துக்கு மாறிய செய்திகள் காட்டுத்தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

விஜய் டிவியில் புதுசு புதுசா பல ஷோக்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வில்லன் நடிகர்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் மறுபக்கத்தை காட்டும் விதமாக வில்லாதி வில்லன் நிகழ்ச்சி உருவாகி உள்ளது. ராதாரவி முதல் சாய் தீனா வரை ஏகப்பட்ட வில்லன் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் நிஜ முகத்தை காட்டி உள்ளனர்.

படத்தில் தான் வில்லன்

படத்தில் தான் வில்லன்

சினிமாவில் தான் இவர்கள் வில்லன் நடிகர்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில், ஹீரோக்களுக்கும் மேலாக ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். சிலர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகளை கொண்டு இந்த ஆளா அத்தனை பொண்ணுங்கள பலாத்காரம் செய்வது போல நடித்தார் என்றும், படத்தில் டெரராக இருந்தவரா இப்படி பால் வடியும் குழந்தையாக இருக்கிறார் என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

சாய் தீனா ப்ரொபோஸ்

சாய் தீனா ப்ரொபோஸ்

இந்நிலையில், சாய் தீனா ப்ரொபோஸ் செய்யும் ப்ரோமோ ஒன்று வெளியாகி ஏகப்பட்ட ரசிகர்களின் லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகிறது. கல்லுக்குள் ஈரம் என்று சொல்வது போல கரடு முரடான முகத்தில் காதல் என்னம்மா பொங்கி வழியுது பாருங்க என விஜய் டிவி காட்டி உள்ள இந்த ப்ரோமோ நிச்சயம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல

அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல


ஆணழகன் என்றும் காதல் மன்னன் என்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் தீனா படத்தில் லைலாவை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சாய் தீனா செய்துள்ள ப்ரொபஸல் சீன் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X