திரும்பவும் டின்ஏ டெஸ்ட் எடுத்துடுவோமா.. பாரதி கண்ணம்மா க்ளைமாக்ஸ் குறித்து பேசிய வில்லி வெண்பா!
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் அந்த சேனலின் பிரதான நிகழ்ச்சியாக காணப்படுகிறது.
நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் கணவன் -மனைவி பிரிவை மையமாக வைத்து தொடர்ந்து பல எபிசோட்களை வழங்கி வந்துள்ளது.
இந்தத் தொடரின் வில்லி வெண்பா இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் குறித்து தற்போது பேசியுள்ளார்.

விஜய் டிவி
விஜய் டிவியின் பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் முன்னிலை வகித்து வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், சீரியல்களை களமிறக்கி வருகிறது விஜய் டிவி.

கணவன் -மனைவி உறவுச்சிக்கல்
அந்த வகையில் விஜய் டிவில் நீண்ட காலங்களாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா. கணவன் -மனைவி உறவுச் சிக்கலை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் ஒரு காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக டிஆர்பியிலும் முதலிடத்தில் காணப்பட்டது.

இழுவையான எபிசோட்கள்
தொடரில் நடிகர்கள் மாற்றம் மற்றும் டிஎன்ஏ டெஸ்ட் விஷயத்தை வைத்துக் கொண்டு தொடரை தொடர்ந்து இழுவையாக ஒரே மாதிரியான எபிசோட்களாக கொடுத்துவருவது என பல மைனஸ்களுடன் இந்தத் தொடர் தற்போது ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. சீரியல் எப்போது முடியும் என்றும் கேட்க வைத்துள்ளது.

8வது இடத்தில் பாரதி கண்ணம்மா
டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்தத் தொடர் தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை சேனலின் பாக்கியலட்சுமி தொடர் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து ரசிகர்களின் கேள்வி பதில் செஷனில் சீரியலின் வில்லி வெண்பா பேசியுள்ளார்.

ரசிகர்களுடன் உரையாடல்
சீரியலில் வெண்பாவாக வில்லத்தனம் காட்டிவரும் பரீனா ஆசாத், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடினார். அப்போது அவர்களின் சீரியல் குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். சீரியல் எப்போது நிறைவடையும் என்று ரசிகர்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மீண்டும் டிஎன்ஏ டெஸ்ட்
சீரியலில் மீண்டும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துடுவோம் என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த பதில் நகைச்சுவையுடன் சீரியல் குறித்த ஒரு தெளிவையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குடும்பத்துடன் அவுட்டிங் சென்றுள்ள பாரதி மற்றும் கண்ணம்மா இடையில் ஒரு புரிதல் ஏற்படுவது போல காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.

விரைவில் நிறைவு?
இதையொட்டி விரைவில் சீரியல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவி பிரபலமான சீரியல்களின் இரண்டாவது சீசன்களை ஒளிபரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், இந்த தொடருக்கும் இரண்டாவது சீசன் வெளியாகுமா, அது விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருக்குமா என்பது ரசிகர்களின் கேள்வியாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











