கஸ்தூரியின் வினா – விடை - வேட்டை
புதுயுகம் தொலைக்காட்சியில் வினா விடை வேட்டை (ஜூனியர்ஸ்) தொடங்கியுள்ளது.
புதுயுகம் தொலைக்காட்சியில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் முதல் பருவத்தில்,தமிழகத்தின் பல்லாயிரக்கனக்கான கல்லூரி அணிகளிலிருந்து, தலைச்சிறந்த 16 அணிகள் பங்குபெற்றன.
பல்வேறு கடினமான கட்டங்களைக் கடந்த, நான்கு அணிகள் மோதிய பரபரப்பான இறுதிச் சுற்றில், சென்னை ஐஐடி அணி முதல் இடத்தையும், கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பெற்றது.

வினா விடை வேட்டை சீசன் 2
தமிழ்நாட்டில், கல்லூரி மாணவர்களுக்கான பிரம்மாண்ட அறிவுத் தேடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் பள்ளிமாணவர்களுக்கான வேட்டையில் களமிறங்கியிருக்கிறது.

மாணவர்களின் நுண்ணறிவு
மாணவர்களின், ஞாபகத்திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கேள்விகளைத் தொகுக்காமல்,அவர்களின் நுண்ணறிவு மற்றும், பக்கவாட்டு சிந்தனையை(lateral thinking) கருத்தில் கொண்டு கேள்விகள் அமைக்கப்பட்ட விதம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

உலகம் பற்றிய கேள்விகள்
வினாவிடை வேட்டையின் முதல் பருவத்தில் முழுக்க முழுக்க இந்தியா சம்பந்தமான கேள்விகள், தேடல்கள் என்று அசத்திய இந்தக் குழு, இம்முறை தன் அறிவுத்தேடலை இந்தியா மற்றும் உலகம் சார்ந்து அமைத்துக்கொண்டிருக்கிறது.

கஸ்தூரியின் அழகான கேள்விகள்
இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே பல வினாடி வினா போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அனுபவமும் ஆற்றலும் அவர் கேள்விகளை கேட்கும் விதத்திலேயே தெரிகிறது.

கஸ்தூரி க்விஸ் ஷோ
மேலும் பி பி சி நடத்திய மாஸ்டர் மைண்ட் க்விஸ் ஷோ ( mastermind quizshow)வில் பங்குபெற்று அரை இறுதி வரை சென்ற ஒரே தமிழர் என்ற பெருமையும் கஸ்தூரிக்கு உண்டு.


Click it and Unblock the Notifications











