மிஸ்டர் லோக்கல், கனா.. இன்னும் பல .. சிறப்பான விநாயகர் சதுர்த்தி.. தயாராகும் சேனல்கள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தி இதோ வந்து விட்டது. நாளை நாடு முழுவதும் விநாயகரை கொண்டாட தயாராகி வருகிறார்கள் மக்கள். இந்த நிலையில் தொலைக்காட்சிகளும் கூட மக்களை மகிழ்விக்க சிறப்பு நிகழ்ச்சிகளுடன் காத்துள்ளன.

வழக்கம் போல சிறப்புத் திரைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வழக்கமான பட்டிமன்றங்களுடன் திரைப்படங்களும் மக்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் மக்களைக் கவர்ந்த லேட்டஸ்ட் படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.

சன் டிவியில் சார்லி

சன் டிவியில் சார்லி

சன் டிவியில் நாளை காலை 11 மணிக்கு சார்லி சாப்ளின் 2 படம் ஒளிபரப்பப்படவுள்ளது. இதன் முதல் பாகம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது நினைவிருக்கலாம். கடந்த ஜனவரியில்தான் இப்படம் திரைக்கு வந்திருந்தது. இப்போது டிவிக்கு வந்துள்ளது.

வெண்ணிலா கபடிக் குழு 2

வெண்ணிலா கபடிக் குழு 2

அதே சன் டிவியில் வெண்ணிலா கபடிக் குழு 2 படமும் நாளை ஒளிபரப்பாகிறது. சமீபத்தில்தான் இப்படம் திரைக்கு வந்தது. முதல் பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட மக்களைக் கவர்ந்தது 2ம் பாகமும்.

ஐஸ்வர்யாவின் கனா

ஐஸ்வர்யாவின் கனா

ஐஸ்விர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த கனா திரைப்படம் ஜி தமிழ் டிவியில் நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்புத் திரைப்படமாக திரையிடப்படவுள்ளது. சிவகார்த்திகேயனின் சொந்தப் படம் இது.

லோக்கல்

லோக்கல்

சன் டிவியில் நாளை மாலை ஆறரை மணிக்கு திரையிடப்படுகிறது மிஸ்டர் லோக்கல். இதுவும் கூட சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம்தான்.

எஸ்ஜே சூர்யாவின் மான்ஸ்டர்

எஸ்ஜே சூர்யாவின் மான்ஸ்டர்

விஜய் டிவியில் நாளை காலை 11.30 மணிக்கு எஸ்ஜே சூர்யா, பிரியா பவானிசங்கர் நடித்த வித்தியாசமான கதையுடன் கூடிய மான்ஸ்டர் ஒளிபரப்பாகவுள்ளது.

வட சென்னை

வட சென்னை

விஜய் டிவியில் நாளை காலை 9 மணிக்கு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான வட சென்னை ஒளிபரப்பாகவுள்ளது. பெரிய அளவில் பேசப்பட்ட படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X