தெனாலிராமன், திருமணம் எனும் நிக்ஹாக்: டிவியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

By Mayura Akilan

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரசிகர்களுக்காக தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில் வடிவேலு நடித்த தெனாலிராமன், ஜெய் நடித்த திருமணம் எனும் நிஹ்காக், யாமிருக்க பயமே போன்ற புத்தம் புது திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளன.

விடுமுறை தினம் என்றாலே தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டம்தான். டிவி ரசிகர்களை வீட்டை விட்டு வெளியே போக விடமல் கட்டிப்போட ஒரே வழி சிறப்பு நிகழ்ச்சிகளையும், புத்தம் புது திரைப்படங்களையும் ஒளிபரப்புவதுதான்.

இதில் திரைப்படங்களைப் பார்க்கிறோமோ இல்லையோ விளம்பரங்களை மணிக்கணக்கில் பார்த்தே ஆகவேண்டும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு காமெடி, பேய், கலக்கல் படங்களை ஒளிபரப்புகின்றன சேனல்கள்.

தெனாலிராமன்

தெனாலிராமன்

சன் டிவியில் சிறப்புத் திரைப்படமாக வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

யாமிருக்க பயமே

யாமிருக்க பயமே

ஜீ தமிழ் சேனலில் கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே திரைப்படமும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளன.

திருமணம் எனும் நிஹ்காக்

திருமணம் எனும் நிஹ்காக்

ஜெயா டிவியில் ஜெய், நஸ்ரியா நடித்த திருமணம் எனும் நிஹ்காக் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

தசாவதாரம்

தசாவதாரம்

கலைஞர் டிவியில் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளனர்.

நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன்

விஜய் டிவியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெசலாக விஷால், லட்சுமி மேனன் நடித்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

சிறப்புத் திரைப்படங்கள்

சிறப்புத் திரைப்படங்கள்

இந்தச் சேனல்களைத் தவிர பாலிமர், பொதிகை, ராஜ் டிவி, வசந்த் டிவி, மெகா டிவி, விண்டிவி, போன்ற டிவி சேனல்களும் விநாயகர்சதுர்த்தியை ஒட்டி பல்வேறு சிறப்புத் திரைப்படங்களையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X