விநாயகர் சதுர்த்தி விஜய் டிவியில் எதிர்நீச்சல், கும்கி, துப்பாக்கி
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 3 சிறப்பு திறப்படங்களை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.
விநாயகர் சதுர்த்தி தினம் விடுமுறை தினம். இதனையொட்டி தொலைக்காட்சிகளில் சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். புத்தம் புதிய திரைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம்.

எதிர்நீச்சல்
இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக விஜய் டிவியில் சிவகார்த்திக்கேயன், பிரியா ஆனந்த் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மாலையில் ஒளிபரப்பாகிறது.

கும்கி, துப்பாக்கி
இந்த திரைப்படத்தை தவிர விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த கும்கி திரைப்படமும், விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஆர்யா, நயன்தாரா ரொமான்ஸ்
ராஜா ராணி திரைப்பட ஜோடி ஆர்யா, நயன்தாரா பங்கேற்கும் டார்லிங் டார்லிங் நிகழ்ச்சி வரும் விநாயகர் சதுர்த்தியன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சூப்பர் ரொமான்ஸ்
ராஜா ராணி திரைப்படத்தின் சிறப்பம்சங்களையும், ரொமான்ஸ் காட்சிகளையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான முன்னோட்டமே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. திவ்யதர்ஷினி, ரம்யா ஆகியோர் டார்லிங் டார்லிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications











