பாரதி கண்ணம்மா சீரியல்… இனி இவர் தான் கண்ணம்மா…குழப்பத்தில் ரசிகர்கள் !
சென்னை : பாரதி கண்ணா சீரியலிலிருந்து ரோஷினி விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் இடத்திலும் எழுந்துள்ளது.
Recommended Video
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா.
பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இனி எப்படி போகுமோ என்ற கவலை மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த சில மாதங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் பரபரப்பாக ஒளிபரப்பான இந்த தொடரிலிருந்து பெரிய ட்விஸ்டுடன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகி உள்ளார்.

ரோஷினி விலகினார்
ரோஷினி சொந்த காரணங்களுக்காக விலகுகிறார் என்று சொன்னாலும், பட வாய்ப்பு வந்து இருப்பதாகவும் அதற்காக விலகுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எங்கு பார்த்தாலும் அவருக்கு பதில் இனி யார் நடிக்க போகிறார் என்ற கேள்வியே எழுந்துள்ளது.

இனி இவர் தான் கண்ணம்மா
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான வினுஜா தேவி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வினுஜாவும் ரோஷினி போன்று மாநிறம் என்பதால் இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவாத்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து பாரதி கண்ணம்மா சீரியல் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நட்சத்திரா
இதேபோல, யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவும் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்த லிசா ஏற்கனவே யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திரவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதால் அவரை இந்த தொடரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications











