சிவாங்கியின் பாடிகாடை பார்த்திருக்கீங்களா.. அவன் எப்ப வளர்ந்து.. பார்க்க பயங்கரமான ஆளா இருக்கானே

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஒவ்வொரு வீட்டின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் சிவாங்கி. தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நானும் ரெளடிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனிடையே, சிவாங்கி இவர் தான் எனது பாடிகாட் என தெரிவித்துள்ளார். நானும் ரெளடிதான் புரோமோ சூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஹிட் அடைந்து அதில் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பெரியோர் முதல் சிறுவர்கள் வரை கவரும் வகையில் புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இதன் புரோமோ வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தத. நானும் ரெளடிதான் என்ற அட்டகாசமான, பிரம்மாண்ட நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மீடியா மேசன்ஸ் இணைந்து வழங்க இருக்கிறது.

Viral video of the show Naanum Rowdythan hosted by Shivangi

நானும் ரவுடிதான்: இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மோதும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இதன் புரோமோ வீடியோவை பார்க்கும்போதே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. இதில் வரும் ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு விதமான சுற்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல், பொது அறிவு குழந்தைகளின் நினைவாற்றலை தூண்டும் விதத்தில் விளையாட்டு இருக்க போகிறது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் ரெளடிகளாக இருக்கும் சிறியவர்களை பெரியவர்கள் ஜெயிக்க வேண்டும். ஆளை பார்த்தா டம்மி பீஸா இருக்கே ஆனால், நிறைய விசயம் வைத்திருப்பார்கள் கவனமாக இந்த விளையாட்டை பார்த்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க தயாரா இருங்க.

சிறப்பு விருந்தினர்கள்: நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் செப் வெங்கடேஷ் பட், தீனா, அயலி சீரியல் மூலம் பிரபலமான அபி நட்சத்திரா ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இதன் 2வது புராமோ வீடியோவில் சிவாங்கி ரஜினி பாட்டிற்கு டான்ஸ் ஆடி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். சிவாங்கியுடன் அஸ்வத்தும் இதனை தொகுத்து வழங்க இருக்கிறார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. முன்னதாக இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கிய குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் அடித்தன. அந்த வரிசையில் நானும் ரெளடிதான் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது, பார்வையாளர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

Viral video of the show Naanum Rowdythan hosted by Shivangi

சிவாங்கியின் பாடிகாட்: நானும் ரெளடிதான் நிகழ்ச்சிக்கான சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவாங்கி தனது பாடிகாட் இவர் தான் என ஒரு குட்டி குழந்தையை காண்பித்து விளையாடுகிறார். அப்போது அந்த சிறுவன் சிவாங்கியின் பேச்சை கண்டுகொள்ளாமல் தூங்கி வழிகிறான். அவனது மைண்ட் வாய்ஸ் சீக்கிரம் விடுங்கடா வீட்டுக்கு போகனும் என்பது போல் இருக்கிறது. இவன் தான் என் பாடிகாட் என்று சொல்றேன் எந்த ரியாக்சனும் காட்ட மாட்டேங்குறான் என சிவாங்கி கூறுகிறார். பின்னர் சிவாங்கியின் பக்கத்தில் இருந்த நபர் அவன் எப்ப வளர்ந்து உனக்கு பாடிகாட் ஆவது என கலாய்க்கிறார். முதல் புரோமோ வீடியோவுக்கான சூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் சிவாங்கி செய்யும் குறும்புத்தனமான வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X