Bigg Boss : தர்ஷிகா, அன்ஷிதா.. காதல் நாடகமாடும் விஷால்.. திட்டித்தீர்க்கும் பேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் நேற்று குறைந்த வாக்குகளை பெற்ற ஜெப்ரி வெளியேற்றப்பட்டார். இன்று அன்ஷிதா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஷால், தர்ஷிகா மற்றும் அன்ஷிதா என இருவரிடமும் காதல் நாடகமாடி வருகிறார் என இணைய வாசிகள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் முதல் ஆளாக தீபக்கின் குடும்பத்தினர் வந்து சென்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் வந்து சென்ற நிலையில், நான்காவது நாள் அவர்களின் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். இதில் சௌந்தர்யா,விஷ்ணுவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதே போல, அருண், அர்ச்சனா இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் வார இறுதியில் எலிமினேஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருப்பதால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.

விஷால் அன்ஷிதா: இப்படி இந்த பக்கம் யார் வெளியேறுவார்கள் என்ற குழப்பம் இருக்கும் நிலையில், அன்ஷிதா வெளியேறுவதற்கு முந்தைய நாள், விஷால் மற்றும் அன்ஷிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஷால், ரெண்டு பேர்ல யாரு வெளில போக போகிறோம் என்று தெரியாது. அப்படி நான் வெளியில போனா, உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன். அப்படின்னு நீ வெளியில போனா எனக்காக காத்துகிட்டு இரு, நான் வெளியில் வந்த பிறகு, உனக்காக ஒரு க்ளோஸ் பிரண்டாக நான் நிச்சயம் இருப்பேன் என்கிறார். இதையடுத்து, அன்ஷிதா, எனக்கு வெளியில் போனதும் விஷயத்தை சில பேரிடம் பேச வேண்டி இருக்கு என்று சொல்ல, அதுஎல்லாம் வேண்டாம் அன்ஷிதா, அவங்க கிட்ட நீ பேச வேண்டிய அவசியமே இல்லை என்று காதல் வசனத்தை பேசி இருக்காரு.
காதல் உனக்க தேவை: இந்த விஷயத்தை அன்ஷிதா, அருணிடம் சென்று, விஷால் என்னை காதலிக்கிறானா என கேட்டு இருக்கிறார். அதற்கு அருண் எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் நான் தான் சந்தோஷமான ஆளாக இருப்பேன் என்று சொல்ல, அன்ஷிதா, அவன் பேசுவதை எல்லாம் பார்த்தா அப்படித்தான் இருக்கு, இருந்தாலும் குழப்பமாக இருக்கு என்று சொல்ல, அருண் உனக்கும் கண்டிப்பா காதல் தேவை என்று அருணும் அவர் பங்கிற்கு பேசி உள்ளார்.
காதல் நாடகம்: விஜே விஷால், தர்ஷிகா வீட்டில் இருந்த போது இருவரும் ஜோடிப்போட்டுக்கொண்டு வீட்டில் சுற்றி வந்தார்கள். தர்ஷிகாவிற்கு விஷால் மீது காதல் வந்ததால்தான் அவர் விளையாட்டை சரியாக விளையாடாமல் வெளிறேறினார். ஆனால், தர்ஷிகா வெளியே சென்றதும், அது வெறும் நட்பு தான் காதல் இல்லை, அது மொக்கை மூஞ்சு என்று பேசி இருந்தார். இதைப்பார்த்த தர்ஷிகா போட்டியில் கூட, விஷால், காதலை காட்டி ஏமாற்றிவிட்டார் என்று கண்கலங்கி பேசி இருந்தார். தற்போது, அன்ஷிதாவிடமும் அதே போல, காதல் வசனத்தை விஷால் பேசி ஏமாற்றி உள்ளார். பெண்களை திறமையால் அடிக்க முடியாது என்பதால், விஷால் இப்படி காதல் நாடகமாடி வருகிறார் என்று இணையவாசிகள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











