கமல், சூர்யா வழியில் சின்னத்திரைக்கு வரும் விஷால்: ஆனால் பேச்சு மட்டும்...
சென்னை: கமல் ஹாஸனை அடுத்து டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் விஷால்.
உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், வழங்க உள்ளார். இந்நிலையில் விஷாலும் சின்னத்திரைக்கு வருகிறார்.
அவரும் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

விஷால்
தெலுங்கில் நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வரும் மேமு சைதம் நிகழ்ச்சியை போன்று தமிழிலும் ஒரு நிகழ்ச்சியை அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஷால் தொகுத்து வழங்க உள்ளாராம்.

சாதாரணம்
லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் வாழ்க்கையில் கனவுகளுடன் இருப்பவர்களுக்கு உதவி செய்யப்படுகிறது. மேலும் பிரபலங்கள் ஒரு நாள் சாதாரண ஆள் போன்று கூலி வேலை செய்து அந்த பணத்தை தானம் செய்வார்கள்.

நல்லது
மக்களுக்கு நல்லது செய்ய ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய விஷால் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு உதவ ஆர்வமாக உள்ளார். வாழ்க்கையில் முன்னேற கஷ்டப்படுபவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவி பெறுவார்கள்.

கனவு
ஏழை, எளிய மக்களின் கனவு நிறைவேற இந்த நிகழ்ச்சி உதவும். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணம் நல்ல காரியத்திற்காக செலவு செய்யப்படும். அதனால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் விஷால்.

சரியான நேரம்
சரியான நேரத்தில் தனது அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வரப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார். சரியான நேரமா, இது அவர் டயலாகாச்சே என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











