Bigg boss tamil 7 show: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார கேப்டன்.. ஆட்டம் போட்ட மாயா -பூர்ணிமா!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அதிரடியாக நடைபோட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காரணம் கூறி பிரதீப் வெளியேற்றப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் இந்த முடிவு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டுமுதல் சிறப்பான சீசன்களை கொடுத்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சி கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் கொடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன்: கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டில் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது கமல்ஹாசன் நிகழ்ச்சியிலிருந்து இடையிலேயே வெளியேறினார். தொடர்ந்து நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அடுத்தடுத்த சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் மாஸ் காட்டி வருகிறார். அவரது தொகுப்பு நிகழ்ச்சி பலமாக அமைந்துள்ளது.
63வது நாளில் என்ட்ரி: பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 63வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையொட்டி பிரமோக்களும் வெளியாகி வருகின்றன. நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் வாரத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியிலிருந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர். முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்ட அனன்யா, தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் வர்மாவுடன் இணைந்து போட்டியில் மீண்டும் நுழைந்துள்ளார்.
பிரதீப் எலிமினேஷன்: இதனிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் அவரால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அவரது வெளியேற்றம் நிகழ்ச்சியில் அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் ஒருநிலையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீண்டும் நிகழ்ச்சியில் இணைவார் என்றும் கூறப்பட்டது.
வைல்ட் கார்ட் என்ட்ரி: ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் நிகழ்ச்சியில் காணப்படவில்லை. முன்னதாக நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த தினேஷ், அர்ச்சனா, ஆகியோர் நிகழ்ச்சியில் தற்போது மாஸ் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ச்சியில் அனன்யா மற்றும் விஜய் வர்மா கடந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர். இந்நிலையில் தற்போது வாரயிறுதி எபிசோடில் வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்.
கேப்டனான விஷ்ணு: இந்நிலையில் நேற்றைய தினம் கேப்டன் தேர்விற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கூல் சுரேஷ், அர்ச்சனா மற்றும் விஷ்ணு போட்டியிட்டனர். இதில் விஷ்ணு வெற்றிபெற்று அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாயா மற்றும் பூர்ணிமா கேங் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டனர். விஷ்ணு மற்றும் பூர்ணிமா இடையில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது பூர்ணிமாவுடன் மாயா வெறுப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











