பிக் பாஸ் மேடையை ஆக்கிரமித்த விஸ்வரூபம் 2 குழு: மீசையை முறுக்கிய கமல், பார்த்து ரசித்த மைக்கேல்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் மேடையில் நானாகிய நதிமூலமே, ஞாபகம் வருதா ஆகிய பாடல்களை கமல், ஸ்ருதி ஹாஸன் ஆகியோர் பாடினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது விஸ்வரூபம் 2 பட பாடலை வெளியிடுவதாக கமல் ஹாஸன் அறிவித்தது போன்றே செய்தார். பிக் பாஸ் மேடையை இசைக்கச்சேரி மேடை போன்று மாற்றிவிட்டார்கள்.
ஜிப்ரான் தனது குழுவினருடன் வந்து பார்ப்பவர்கள் அசந்துபோகும் படி செய்துவிட்டார்.

ஸ்ருதி
நானாகிய நதிமூலமே பாடலை கமல் ஹாஸன் பாடத் துவங்கியதும் ஸ்ருதி ஹாஸன் பாடிக் கொண்டே பிக் பாஸ் மேடைக்கு வந்தார். அப்பாவும், மகளும் ஒரே மேடையில் பாடியதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்பாவை விட உயரமாக இருப்பதால் கொஞ்சம் குனிந்து குள்ளமாக பாவனை செய்தார் ஸ்ருதி.

மைக்கேல்
ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார். ஸ்ருதி என்று பெயர் வைக்கும்போது அவர் பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அது நடந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் கமல்.

ஆங்கிலம்
ஸ்ருதி ஹாஸனும் தன் பங்கிற்கு சென்றாயனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார். அவர் ஸ்ப்லென்டிட் என்று கூற சென்றாயனோ ஸ்ப்ளெண்டர் என்றார். விஸ்வரூபம் 2 பட ட்ரெய்லரையைும் போட்டியாளர்களுக்கு போட்டுக் காட்டினார் கமல். கமலை தெய்வமாக பார்ப்பதாக கூறினார் டேனி.

பார்வையாளர்கள்
ஞாபகம் வருகிறதா என்ற பாடலை பாடும் முன்பு ஸ்ருதி தனது அப்பா கமலை பார்வையாளர்களுடன் சேர்ந்து அமருமாறு கூறி அனுப்பி வைத்தார். ஸ்ருதி ஆடிக் கொண்டே பாடியதை பார்த்து பெருமையில் மீசையை முறுக்கினார் கமல் ஹாஸன்.

அம்மா
நான் எழுதிய முதல் அருமையான கவிதை ஸ்ருதி தான் என்று கமல் தெரிவித்தார். ஞாபகம் வருதா பாடலை எழுதியபோது என் அம்மா நினைவு வந்தது. வாகை சூட வா பட பாடல்களை கேட்ட பிறகு அது மிகவும் பிடித்துப் போய் ஜிப்ரானை தனது படத்திற்கு இசையமைக்க வைத்ததாக கூறினார் கமல்.


Click it and Unblock the Notifications











