twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடைக்கு நீர் மோர்... கூலான தர்பூசணி... அசத்தறாரே நம்ம சின்ன கலைவாணர்!

    |

    சென்னை: வருஷா வருஷம் தான் கோடை வெயில் வருது.. இந்த வருஷ வெயில் இது புதுசுன்னு சொல்லி இருக்கார் நடிகர் விவேக்.

    நடிகர் விவேக் தனது மகன் பிரசன்னா நினைவாக சாய் பிரசன்னா டிரஸ்ட் ஆரம்பிச்சு இருக்கார். கடந்த மூணு வருஷமா இந்த டிரஸ்ட் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வந்தாலும் மரம் நடுவது என்பது இதன் தலையாய பணி.

    Vivek distributes free cool butter milk

    அவர், சிங்கம் படத்துல நான் ஒரு வசனம்பேசி இருப்பேன்...வெயில் சுடும், அனல் காத்தா வீசும்ன்னு சொல்லுவாங்க..ஆனா, தூத்துக்குடியில மட்டும் வெயில் தீயா பத்திக்கும்னு.அது மாதிரிதான் இப்போ எல்லா இடத்துலயும் வெயில் தீயா பத்திக்குது.

    கடந்த மூணு வருஷமா என் மகன் பிரசன்னா நினைவாக வெயில் காலத்தில் என்னால முடிஞ்ச இடங்களில் மோர் பந்தல் வச்சுக்கிட்டு வரேன். இந்த வருஷமும் வச்சிருக்கேன்.

    அதுல மோர் மட்டுமில்லாம வெயிலைத் தணிக்கும் தர்பூசணி பழங்கள் கூட கொடுக்கறேன். எதோ ரோட்டுல போற ஏழை பாழைங்களுக்கு இது ஒரு உதவியா இருக்கட்டும்னுதான் இதை செய்யறேன்.

    கலக்குது பாருங்க கலர்ஸ் டிவியின் திருமணம்.. தவறாமல் பாருங்க.. நிறைய நல்ல விஷயம் இருக்கு! கலக்குது பாருங்க கலர்ஸ் டிவியின் திருமணம்.. தவறாமல் பாருங்க.. நிறைய நல்ல விஷயம் இருக்கு!

    உங்களால முடிஞ்சா நீங்களும் இதை செய்ங்க... இதைவிட முக்கியமான விஷயம்.. நாம விழிச்சுகிட்டு இன்னும் நிறைய மரங்கள் நட தொடங்க வேண்டிய காலக்கட்டம் இது. இல்லேன்னா அடுத்த வருஷமும் தீயா பத்திக்கற வெயிலில் நாம் வாட வேண்டியதா இருக்கும் என்றார்.

    சொன்னபடி நடந்த நீர் மோர் பந்தலில்.. நீர்,மோர் தர்பூசணி பழம் கொடுத்து துவக்கி வச்சார் விவேக். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமிக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளார் நடிகர் விவேக்.

    English summary
    Actor Vivek has started a trust in Sai Prasannan in memory of his son Prasanna. The last three years of the year, the Trust is doing many welfare schemes, but the tree is the main task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X