twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    K Balachandar: நடமாடிய பல்கலைக் கழகம்...திறந்த வெளி பல்கலை கூடமாக!

    |

    சென்னை: இன்று இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் பிறந்த தினம். கமல்ஹாசன் ,ரஜிகாந்த், நடிகர் விவேக் என்று பல உன்னத கலைஞர்களை உருவாக்கியவர்.

    ஈடு இணை இல்லாத நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களை நகைச்சுவை நடிகனாக மட்டுமின்றி பல முகங்களைக் காட்டும் படி கதாநாயகனாக நடிக்க வைத்தும், அவரை வெற்றி நாயகனாகவும் ஆக்கி அழகு பார்த்தவர்.

    நாடகம், திரைத்துறை, சின்னத்திரை என்று தடம் பதித்த இந்த கலைஞன், கையில் ஒரு குட்டித் திரை வைத்து அதற்கு ஏதாவது பார்க்கும்படி செய் என்றாலும் அதை செய்வேன் என்று ஒரு நேர் காணலில் கூறி இருந்தார்.

     இயக்கிய படங்களின்

    இயக்கிய படங்களின்

    அப்போது காலக் கட்டங்களில் இப்போது மாதிரி 3 மாதங்களில் படம் எடுத்துவிட முடியாது
    சொல்லப் போனால் இப்போது நாற்பத்தைந்து நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து விடுகிறார்கள். அப்போது குறைந்தது ஒரு வருடம் ஆகும். அந்த காலக்கட்டத்தில்கூட இயக்குனர் சிகரம் இரண்டு மூன்று என்று படங்கள் கமிட் செய்து இயக்கி கொடுத்ததால்தானோ என்னவோ,இவரால் அதிக படங்களை இயக்கிய இயக்குநர் என்கிற புகழை அடைய முடிந்தது.

     நடிக்கும் அனைவருக்கும்

    நடிக்கும் அனைவருக்கும்

    படத்தில் ஒரு வேலைக்காரன், அல்லது தோட்டக்காரன் கதாபாத்திரம் என்றாலும், அந்த கேரக்டரும் கதையோடு ஒன்றிய கதாபாத்திரமாக இருக்கும். இதனாலேயே கே.பி.சார் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எல்லாரும் ஆசைப்படுவார்கள்.. காலத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டு படம் எடுக்கும் இயக்குநரான பாலச்சந்தர் சார் எந்த விஷயத்திலும், யாருடைய விமர்சனம் கண்டும் தன் கருத்தில் இருந்து பின் வாங்கியதில்லை.

     சர்ச்சை என்றாலும்

    சர்ச்சை என்றாலும்

    இவரின் இயக்கத்தில் உருவான கல்கி படம் சர்ச்சைக்கு உள்ளான படம்தான். என்றாலும், என்னதான் பாலச்சந்தர் சார் அப்படி சொல்லி இருக்கார் பார்க்கலாமே என்று கல்கி படத்தை பார்க்கப்போய் அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார்கள். இப்படிப் பல முரண்பட்ட கருத்துக்களை சொல்லியும், இவர் பெயரும் கெட்டுப்போகவில்லை ,படத்தையும் ஏற்றுகொள்ள வைத்தார். இதெல்லாம் படு சாமர்த்தியம்.

    விவேக் ட்வீட்

    தனது குருநாதரின் பிறந்த நாளுக்கு என்று ஆத்மார்த்த சிஷ்யன் நடிகர் விவேக் விசுவாசத்துடன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,

    என் கண்ணாடியில் தெரிவது என் முகம். ஆனால், என் உணவுத் தட்டில் தெரிவது உன் முகம் என்று நகைச்சுவை நடிகர்,சின்ன கலைவாணர் என்று பெயர் பெற்ற விவேக் தனது குரு நாதரைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

    ட்வீட்டில் ஆசான்

    என் திரையுலக ஆசானை நன்றியோடு நினைவு கூறுகிறேன்...இன்று அவர் பிறந்த தினம் என்றும் அவருடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு குறிப்பிட்டு உள்ளார்.


    உண்மையில் பல கலைஞர்களுக்கு நடமாடும் பலக்லைக்கழகமாக இருந்த கே.பி.சார், இப்போது திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக தான் இயக்கிய படங்களின் மூலம் இருக்கிறார். எப்படி படங்களை இயக்குவது, கதையை எப்படி பின்னுவது என்பதெல்லாம் இவரது படங்களை பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

    English summary
    Today is the birthday of director Sikaram K. Balachander. Kamal Haasan, Rajikant, actor Vivek is the creator of many classic artists.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X