அடச்சீ.. சாண்ட்ரா,வியானா ஒரே பாத்ரூமில்.. கண்டித்த பிக் பாஸ்.. புட்டுபுட்டு வைத்த வியானா!

சென்னை: பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கின்றனர். உள்ளே வந்தவர்கள் நிகழ்ச்சியில் நடந்த அனைத்தையும் பார்த்துவிட்டு, ஓரு முடிவோடு வீட்டிற்குள் வந்து மறைமுகமாக பேசிய பல விஷயங்களை சொல்லியும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வீட்டுக்குள் வந்த வியானா, சாண்ட்ராவை வறுத்தெடுத்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. இதில், பைனலிஸ்ட் ஆக விக்ரம், சபரி, வினோத், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என ஆறு போட்டியாளர்கள் இருக்கின்றன. இந்த வாரத்தில் இருந்து பணப்பெட்டி காண டாஸ்க் நடந்து வருகிறது. முன்போல பணப்பெட்டியை வைக்காமல் போட்டியாளர்களை ஒவ்வொரு டாஸ்காக செய்ய அதற்கு ஏற்றாமல் போல பணம், பணப்பெட்டியில் போடப்பட்டது. இதில், கானா வினோத் பண பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

Bigg Boss Sandra viyana
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகரிப்பதற்காக வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். முதல் நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் வியானா வந்தார். வந்ததுமே அவர் சாண்ட்ராவை, அடுத்தடுத்த கேள்விகளை கேட்டார். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சாண்டரா முன்னாடி ஒன்று பேசுவது, பின் ஒன்று பேசுகிறார். விளையாட்டுக்காக பல விஷயங்களை அவர் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறாள். மேலும், அழுது அழுதே பல விஷயங்களை சாதித்துவிட்டார் என வியன்னா திவ்யாவிடம் கூறினார்.

சாண்ட்ராவை வச்சு செய்த வியானா: அதைத்தொடர்ந்து நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா, நான் இந்த வீட்டில் அழுத போது, கோழை என விமர்சித்தார்கள். ஆனால் சாண்ட்ரா எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறார். அழுது அழுதே பைனல் வரை வந்துவிட்டார் என்றார். அவருடைய பேச்சில் நியாயமே இல்லை. என்னுடன் நட்பாக பழகிவிட்டு கடைசியில் என்னையே விஷப்பாம்பு என்று சொன்னார்கள் என்றார். தொடர்ந்து, வியானா, திவ்யா,ரம்யா மூன்று பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, வியானா, நான் வெளியில் போவதற்கு முன்னாடி, பிக் பாஸ் சாண்ட்ராவும், வியன்னாவும் ஒரேபாத்ரூமில் மைக்கை கழட்டிவைத்துவிட்டு பேசினார்கள். அது என்ன என்று விசாரிக்கும்படி சொன்னரே நியாகம் இருக்க. அப்போது வீட்டு தலையாக இருந்தது ரம்யா தான். அப்போ ரம்யா, பாத்ரூமில் மைக்கை கழட்டி வைத்து பேசினீங்களா என்று கேட்டாங்க, உடனே சாண்ட்ரா, வியானாவிற்கு உடை மாற்றுவதற்காக சென்றோம் வேறு எதை பற்றியும் பேசல, அம்மா மீது சத்யமா பேசவில்லை என்றார்.

ரொம்ப மோசமானவங்க: அன்னைக்கு, அவங்க பிரஜன், திவ்யாவிடம் நெருக்கமாக பழகிறார் அதைப்பார்த்தால் எனக்கு ஆத்திரமாக வருது என்று அழுதாங்க, நான் தான் அவர்களை சமாதானப்படுத்தினேன். நீங்க பிரஜனுடன் பழகியதை சாண்ட்ரா தவறாக புரிந்து கொண்டு, பயங்கரமா அழுதாங்க, அதனால் தான், பிரஜன் போனதும் உங்களிடம் சண்டை போட்டாங்க அவங்க சாதாரண ஆள் இல்லை, அவங்க யார் கூடயையும் உண்மையா இல்லை, எல்லார் கிட்டடையும் பேசிவிட்டு,பின் அவங்களை பற்றியே தப்பு தப்பா பேசுவாங்க என்று, ஒன்னு விடாம அனைத்து வியத்தையும் வியானா, திவ்யாவிடம் புட்டு புட்டு வைக்க, அனைத்தையும் கேட்டு திவ்யா அதிர்ச்சியானார்.

More from Filmibeat

Read more about: bigg boss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X