மனைவிக்கு ஆபாச மெசேஜ்… போலீஸில் புகார் கொடுத்த அஞ்சனாவின் கணவர் !
சென்னை : இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் மீது விஜே அஞ்சனாவின் கணவர் கயல் சந்திரன் புகார் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

பல நிகழ்ச்சிகள்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

விருது
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என கூறிவிட்டார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

காதல் திருமணம்
பின்னர் 2016ம் ஆண்டு கயல் பட கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். பின்னர் புதுயுகம் சேனல் மற்றும் ஜீ தமிழ் கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆபாச மெசேஜ்
இந்நிலையில், அஞ்சனாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர், நீங்க ஹீரோயினா நடிக்கலாமே, உங்கள் கணவர் தான் சினிமாவிலே இல்ல, நீ ஹீரோயினா ஆனா அவருக்கு உதவியா இருக்கும் என்று பதிவிட்டு அஞ்சனா மற்றும் அவரது கணவரை டேக் செய்திருந்தார். மேலும் அந்த நபர் பல அக்கவுண்டுகளிலிருந்து தொடர்ந்து அவருக்கு ஆபாசமாக பல மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.

ஆன்லைனில் புகார்
இதனால், கடுப்பான கயல் சந்திரன், பலமுறை புகார் அளித்து இருக்கிறேன். இதுபோன்ற முகம் தெரியாத நாகரீகம் தெரியாத நபர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது என்றும், நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீசில் பிடி படுவாய், நான் உன்னை எச்சரிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசாருக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











