அச்சச்சோ.. மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா,கையில் மாவு கட்டுடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அய்யோ என்ன ஆச்சு அஞ்சனா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார் அஞ்சனா. அதே தொலைக்காட்சியில் பல வருடமாக பணியாற்றிய லைவ் ஷோக்கள், இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றில் ஆஸ்தான ஆங்கராக மாறினார். மேலும், இவருக்கு திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதும் வழங்கப்பட்டது.

VJ Anjana surgery VJ

காதல் திருமணம்: கயல் படத்தில் நடித்த சந்திரனை 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகி இருந்த இவர், மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்து, யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த போதும், சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் இருந்த போதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

கையில் மாவுகட்டு: இந்நிலையில், அஞ்சனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்தத்தில், இவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு அது... அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்கு பின் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வாக உணர்கிறேன். வீட்டிலும் கவனம் செல்லவில்லை. என்னுடைய வேலைகள் நின்று போனது. ஜிம்மில் எனது முன்னேற்றம் அனைத்தும் தற்போது வீணானது.

நான் குணமடைய ஆறு வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறி உள்னனர். காயத்திற்கு பின் நான் சகஜநிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம். நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். ஆனால் நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்.. அது சரியாகிவிடும். இது முடிவல்ல! என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள், எல்லாம் சரியாகி வரும் என்றும், விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X