உன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி!
சென்னை: தனது கணவர் குறித்த தவறாக பேசிய நெட்டிசனை விளாசி தள்ளியுள்ளார் பிரபல தொகுப்பாளினி.
சன் மியூஸிக் சேனலில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் அஞ்சனா. பல ஆண்டுகள் சன் மியூஸிக்கில் விஜேவாக பணிபுரிந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின்னர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சோஷியல் மீடியா
திருமணத்திற்கு பிறகு வேலைக்கு ஓய்வு கொடுத்த அஞ்சனா, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுயுகம் ஜீதமிழ் என ஆங்கரிங் பணியை தொடங்கினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள விஜே அஞ்சனா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

கணவருக்கு உதவியாக இருக்கும்
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் அஞ்சனாவின் கணவர் குறித்து தவறாக பதிவிட்டிருந்தார். அதாவது, நீங்கள் சினிமாவுக்கு வரலாமே, உங்கள் கணவர்தான் சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து வெளியே போய்விட்டார். நீங்கள் ஹீரோயின் ஆனால் அவருக்கு உதவியாக இருக்குமே என்று பதிவிட்டிருந்தார்.

உங்க அம்மா ரொம்ப பெருமைப்படுவாங்க
இதனை பார்த்து கடுப்பான விஜே அஞ்சனா, அவரை திட்டி தீர்த்து பதிவிட்டுள்ளார். உனக்கெல்லாம் வேலை வெட்டி இருக்குள்ள, அப்போ மூடிட்டு அதை பார்க்க வேண்டியதுதான.. அப்யூஸ் பண்றதுதான் ஃபுல் டைம் ஜாப்பா? உங்க அம்மா ரொம்ப பெருமைப்படுவாங்கப்பா உன்னை பெத்ததுக்கு... என்று பதிவிட்டு விளாசியுள்ளார்.

இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில்
இதனிடையே நடிகர் கயல் சந்திரனும் அந்த நபர் போலி கணக்கில் பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருவதாக கூறி, சென்னை காவல்துறையின் சமூக வலைதள கணக்கில் டேக் செய்துள்ளார். இந்த பதிவை அஞ்சனா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மர்மநபர்களின் முகத்திரையை கிழித்து
விஜே அஞ்சனாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் தவறாக பேசும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாடகி சின்மயி, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், பிக்பாஸ் பிரபலங்கள், சீரியல் நடிகைகள் என பலரும் சமூக வலைதளங்களில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி மர்மநபர்களின் முகத்திரையை கிழித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











