For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ராஜா ராணி 2 சீரியலில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

  |

  சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. ராஜா ராணி சீசன் 1 சீரியலில் சஞ்சீவ் - ஆலியா மானசா நடித்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.

  Recommended Video

  Arulnidhi ,Ron Ethan Innasi Pandian | இந்த படத்தின் Climax பலரை பதபதைக்க வைக்கும் | *interview

  இதைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக சித்து சித் மற்றும் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்தனர். ஆனால் ஆலியா நிஜத்தில் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

  ஆலியாவிற்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது லீட் ரோலான சந்தியா ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஸ்டார் பிளஸ் சேனலில் இந்தியில் Diya Aur Baati Hum பெயரில் ஒளிபரப்பாகி, பிறகு என் கணவன் என் தோழி என்ற பெயரில் ஸ்டார் விஜய்யில் தமிழில் டப் செய்தும் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இதை கதையை அப்படியே ரீமேட் செய்து ராஜா ராணி 2 என்ற பெயரில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

  கமலுக்கு நான்தான் ஒரிஜினல் ஃபேன் பாய்..லோகேஷ் கனகராஜுக்கு சவால் விட்ட இயக்குநர் கௌதம் மேனன் கமலுக்கு நான்தான் ஒரிஜினல் ஃபேன் பாய்..லோகேஷ் கனகராஜுக்கு சவால் விட்ட இயக்குநர் கௌதம் மேனன்

  இத்தனை மொழியில் ஒளிபரப்பானதா

  இத்தனை மொழியில் ஒளிபரப்பானதா

  இந்தியில் மட்டுமின்றி மலையாளம், மராத்தி, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் இந்த சீரியல் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎஸ் கனவுகளுடன் வளரும் ஒரு பெண், தனது கணவரின் உதவியுடன் எவ்வாறு பல தடைகளை தாண்டி, தனது கனவை அடைகிறாள் என்பது தான் கதை. இந்த சீரியல் தற்போது 500 எபிசோட்களை நெருங்கி வருகிறது.

  விலகிய ஆல்யா மானசா

  விலகிய ஆல்யா மானசா

  ஆல்யாவின் விலகலுக்கு பிறகு சீரியல் டி.ஆர்.பி அடி வாங்கினாலும் அர்ச்சனாவின் வில்லத்தனத்திற்காக பலரும் சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது மருமகளாக, செந்திலின் மனைவி அர்ச்சனாவாக வில்லி ரோலில் நடித்து வரும் நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரிலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  என்னது இவர் விலகுறாரா?

  என்னது இவர் விலகுறாரா?

  விஜேவாக இருந்த அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் மூலம் நடிகையாக களம் இறங்கினார். முதல் சீரியலே அவருக்கு நல்ல ரீச்சை வாங்கி தந்தது. விஜய் டிவி விருதினையும் சிறந்த வில்லிக்காக கைப்பற்றினார்.இந்நிலையில் அர்ச்சனா திடீரென்று சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

  விலகலுக்கு இது தான் காரணமா?

  விலகலுக்கு இது தான் காரணமா?

  அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா அருணும் காதலிப்பதாக ஏற்கெனவே பல தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இருவருக்கும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் கல்யாணத்திற்காக அர்ச்சனா சீரியலை விட்டு விலகி இருப்பாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

  இனி இவருக்கு பதில் இவர்

  இனி இவருக்கு பதில் இவர்

  அதுமட்டுமல்ல இனி அர்ச்சனா ரோலில், ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் அர்ச்சனா குமார் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்ம சீரியலிலும் ஹீரோ சித்தார்த்தின் தங்கையாக நடித்து வருகிறார்.அர்ச்சனாவிற்கு பதில் அர்ச்சனா ரவி வர போகிறார் என்ற தகவல் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  வேற ஆளே கிடைக்கலியா

  வேற ஆளே கிடைக்கலியா

  கதைப்படி தற்போது அர்ச்சனாவிற்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் குழந்தை பிறப்பது போல் சீன் வர உள்ளதால் மெச்சூரிட்டியான ஒருவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்திருக்கலாம். புதிய அர்ச்சனாவே பார்க்க குழந்தை போல் உள்ளார். இவர் எப்படி ஒரு குழந்தைக்கு அம்மா ரோலில் செட் ஆவார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

  இப்போ நிஜமாவே விலகிட்டாரா?

  இப்போ நிஜமாவே விலகிட்டாரா?

  விஜே அர்ச்சனா ஏற்கனவே ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. இதனால் சிறிது நாட்கள் அவரை சீரியலில் காட்டாமல் இருந்தனர். பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி, மீண்டும் என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் நிஜமாகவே சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

  English summary
  According to latest sources, Raja Rani 2 serial actress VJ Archana officially quits from the serial. Actress Archana Kumar replacing her as Archana in upcoming episodes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X