Don't Miss!
- News
"உலுக்கிடுச்சே".. ரூம்லயே 3 நாள்.. மலங்க மலங்க விழித்த இளைஞர்.. பக்கத்துலயே "அது" வேற.. சபாஷ் போலீஸ்
- Finance
தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Technology
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பெற்றோருக்கு அர்ச்சனாவோட அட்வைச பாருங்க... தேவையான அட்வைஸ்தான்!
சென்னை : விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர், மற்றும் நடிகையாக வலம் வருபவர் பிரபல விஜே அர்ச்சனா. இவர் தனது மகள் சாராவுடன் இணைந்து யூடியூப் பக்கத்தையும் நடத்தி வருபவர். அதன்மூலம் ஏராளமான பகிர்வுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த ஜோடி பிரிய காரணமே அந்த பிரபலம் தானா? காதல் வலை வீசியதால் தான் விவாகரத்து நடந்துச்சா?

விஜே அர்ச்சனா
விஜய் டிவியில் ஆஸ்தான விஜேவாக இருப்பவர் அர்ச்சனா. இவர் பல டிவி ஷோக்களை அந்த சேனலுக்காக தொகுத்து வழங்கி வருகிறார். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஆங்கராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். டாக்டர் படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

பிக் பாஸில் பங்கேற்பு
இவர் விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4லும் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த ஷோவிற்கு பிறகு இவரது கிரேஸ் ரசிகர்களிடையே வெகுவாக அதிகரித்தது. முதலில் வெளியேறிய இவர் 11வது நாளில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் இவர் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் தனது மகள் சாராவுடன் இணைந்து யூடியூப் பக்கத்தையும் நடித்தி வருகிறார். இதனிடையே பிக் பாஸ் ஷோவிற்கு பிறகு இவரை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர் பதிவுகள்
தொடர்ந்து இவர் சிறப்பான பல பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் தனது ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஆபரேஷன் ஒன்று நடத்தப்பட்ட நிலையில், இவர் தேற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பிரார்த்தனைகளை பதிவு செய்தனர்.

பெற்றோருக்கு அட்வைஸ்
இதனிடையே இவரது தற்போதைய புதிய இன்ஸ்டாகிராம் பதிவு பெற்றோர்களுக்கு அட்வைஸ் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. தற்போது மாணவர்கள், இறுதித் தேர்வை எதிர்கொள்ளும் சூழலில், தன்னுடைய மகள் அவரது ஸ்டைலில் தேர்வை சிறப்பாக எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

தேவையான அட்வைஸ்
இதைப் பார்த்து தான் பெருமை கொள்வதாகவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தேர்விற்காக தயாராக எடுக்கும் முயற்சிகளை குறித்து மட்டுமே கவலை கொள்ள வேண்டும் என்றும் முடிவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கடின உழைப்பிற்கு என்றாவது ஒருநாள் சிறந்த பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.