Vijay TV Priyanka: வயசான குரங்கு நான்.. பிரியங்காவின் குழந்தை லயன் கிங் சிம்பா.. எமோஷனலான VJ அர்ச்சனா!

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர் பெயர் வசி என்றும், அவர் டி.ஜே என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் பிரியங்காவின் முதல் திருமணம் குறித்து பலரும் பேசி வரும் நிலையில், அவருக்கு வி.ஜே. அர்ச்சனா முன்னர் ஒருமுறை வாழ்த்தியது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிரபலமாகிவிட்டாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் தனது தொகுப்பாளர் பணியின் மூலம் தமிழ் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார் பிரியங்கா. இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இணையத்தில் உள்ளது. ஊடக வெளிச்சத்திற்கு வந்த பின்னர் பிரியங்காவின் வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரிந்தது தான். குறிப்பாக அவரது முதல் திருமணம், பிரவீன் குமார் என்பவருடன் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

VJ Archana Wishes To Vijay TV Priyanka Deshpande Second Marriage

இப்படியான நிலையில்தான், பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பலரும் விரும்பினார்கள். இன்னும் சொல்லப்போனால், அதை நேரடியாக பிரியங்காவிடம் கூறினார்கள். அப்படி, பிரியங்காவின் இரண்டாவது திருமணம் குறித்து வி.ஜே. அர்ச்சனா ஒரு முறை பேசியிருந்தார். அதை வாழ்த்து போலவும் சொல்லியிருந்தார். தற்போது பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், அர்ச்சனாவின் சொல் பலிக்க போகிறது என இணையவாசிகள் மற்றும் பிரியங்காவின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

VJ Archana Wishes To Vijay TV Priyanka Deshpande Second Marriage

குழந்தை: அர்ச்சனா கூறும்போது, " உருகி உருகி காதலிக்கும் ஒருத்தன் வரனும், வருவான். குதிரையில் உன்னை வலம் வரச் செய்வானானு எனக்குத் தெரியவில்லை. உனது பாதத்தில் இருப்பவனாக அவன் இருப்பான். அப்படியான ஒருவனுக்காக காத்திருப்பவள் நீ. அவன் உன்னை காதலிக்க வேண்டும். அவன் உனக்கு ஒரு குழந்தை கொடுக்க வேண்டும். இந்த உலகத்தின் முன்னால், லயன் கிங் படத்தில் சிம்பாவைத் தூக்கிக் காட்டுவது போல, இது பிரியங்காவின் மகள், இது பிரியங்காவின் மகன் எனக் காட்ட வேண்டும்.

வயதான குரங்கு: அதற்காக நான் வாழ்த்துகிறேன், பிராத்திக்கவும் செய்கிறேன். அந்த மலைக்கு மேல் குழந்தையைக் காட்டும் போது கீழே பல்லாயிரக்கணக்கான மிருகங்கள் இருக்கும். அதில் வயதான குரங்கு ஒன்று இருக்கும், அந்த வயதான குரங்காக நான் அங்கே நின்று கொண்டாடுவேன். அப்போது நான் பேரன்போடு, அது என் குழந்தை எனக் கூறுவேன். உனது மகிழ்ச்சிக்காக நான் வாழ்த்துகிறேன், விரும்புகிறேன். அளவில்லாத மகிழ்ச்சி உனக்கு கிடைக்கட்டும்.

VJ Archana Wishes To Vijay TV Priyanka Deshpande Second Marriage

பலிக்கப்போகுது: குறையே இல்லாத ஒரு அன்பான வாழ்க்கை, 16 செல்வங்களும் பெற்று, என்றைக்குமே கண்ணீர் என்பது உன் கண்களில் இருந்து வருகிறது என்றால் அது சந்தோஷத்திலும் பூரிப்பிலும் மட்டுமே உனக்கு வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். நாங்கள் எல்லோரும் வேண்டிக் கொள்கிறோம். வி லவ் யூ." என வாழ்த்தியுள்ளார். இவரது இந்த வாழ்த்து தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பிரியங்காவின் ரசிகர்கள், அர்ச்சனா கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகிறது. மற்ற வார்த்தைகளும் சீக்கிரம் நிறைவேறும் என தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X