குட்டிப் பொண்ணு இல்ல.. அம்மாவிற்கே டஃப் கொடுக்கும் சுட்டிப் பொண்ணு.. இன்ஸ்டாகிராமை அலறவிடும் சாரா!
சென்னை: சின்னத்திரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அசாத்தியப் பேச்சாற்றலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, 'ரியாலிட்டி ஷோ குயின்' என்று கொண்டாடப்படுபவர் தொகுப்பாளினி அர்ச்சனா. ஆனால், அம்மாவுக்கு இணையாக, ஏன் அம்மாவையே மிஞ்சும் அளவுக்கு இணையத்தில் மாஸ் காட்டி வருகிறார் அவரது மகள் சாரா.
தொலைக்காட்சிகள் வழியே இல்லத்தரசிகளில் மனதிற்குள் நுழைந்த அர்ச்சனா ஜீ தமிழ், விஜய் டிவி எனப் பல முன்னணி சேனல்களில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர். அவரைத் தொடர்ந்து மகள் சாராவும் மிக இளம் வயதிலேயே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, 'குட்டி ஆங்கர்' எனத் தமிழ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையானார்.

சொகுசு கார்: சாரா தொலைக்காட்சிகளில் அதிகம் தலைகாட்டவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் அவர் ஒரு மிகப்பெரிய 'இன்ஃப்ளூயன்ஸர்' ஆக உருவெடுத்துள்ளார். நாம் இன்னும் இவரை சின்னப் பாப்பா என்று நினைத்துக் கொண்டிருந்தால், சாரா செய்திருக்கும் காரியம் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
அண்மையில் சாரா, 27 லட்ச ரூபாய் பதிப்புள்ள சொகுசு காரை வாங்கி இருந்தார். இந்த காரை அவர் தனது சொந்த உழைப்பில் வாங்கி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் முன்னணி பிராண்டுகளுக்கு ப்ரோமோஷன் வீடியோக்கள், விளம்பரங்கள் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தை வைத்தே இந்த இளம் வயதில் சொந்தமாக கார் வாங்கி உள்ளார்.
சுட்டிப் பொண்ணு: இன்ஸ்டாகிராமில் அசுர வேகத்தில் சாராவுக்குப் ஃபாலோயர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், அவர் பதிவிடும் கன்டென்ட்கள் தான். தனது அன்றாட வாழ்க்கை பயணம், தினசரி மேக்கப் டிப்ஸ், அம்மா அர்ச்சனா மற்றும் சித்தி அனிதாவுடன் சேர்ந்து வீட்டில் அவர் அடிக்கும் லூட்டிகள் என அனைத்தையும் செம்ம சுவாரசியமான ரீல்ஸ் வீடியோக்களாக மாற்றிப் பதிவிட்டு வருகிறார். அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோக்களையும் பார்த்த ஃபேன்ஸ் அவருக்கு ஃலைக்குகளை குவித்து வருவது மட்டுமில்லாமல் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சாரா தனது அம்மா அர்ச்சனாவுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications