கேப்டன் ‘தல’ மிஸ்டர் கூல்: டோணி பற்றி டிவி தொகுப்பாளினி பாவனா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆசைப்படுவது இயல்பு.
அதேபோன்ற ஆசை டிவி தொகுப்பாளினி பாவனாவிற்கும் இருந்துள்ளது. டோணி பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாவனா தொகுத்து வழங்கியிருக்கிறார்.
ஆனால் ஒருமுறை கூட அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதில்லையாம். அது சமீபத்தில்தான் நிறைவேறியதாம்.

டோணியுடன் போட்டோ
சமீபத்தில் டோணி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கிய பாவனா, அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

காத்திருந்த டோணி
நிகழ்ச்சி முடிந்த உடன் காத்திருந்த டோணி, பாவனா உடன் போட்டோ எடுத்துக்கொண்டாராம்.

உங்களை வாட்ச் பண்றேன்
போட்டோ எடுத்து முடித்த உடன், ஒவ்வொரு வருஷமும் உங்களை நான் வாட்ச் பண்றேன் என்று பாவனாவிடம் கூறினாராம்.

மிஸ்டர் கூல் கேப்டன்
இதுவரை டோணி பங்கேற்ற பத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். இப்போதுதான் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘கேப்டன் தல மிஸ்டர் கூல்' என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாவனா.


Click it and Unblock the Notifications











